news

News April 26, 2024

UTS செயலியில் இனி வீட்டில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்

image

ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், UTS செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் ரயில் நிலையம் தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்திற்குள் பயணத்தை தொடங்க வேண்டும்.

News April 26, 2024

ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி நன்றி

image

ஜி7நாடுகளின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி சுதந்திர தினத்திற்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார். இத்தாலியில் வரும் ஜூன் 13 முதல் 15ஆம் தேதி வரை ஜி7 மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பே, அதில் பிரதமர் பங்கேற்பது குறித்து தெரியவரும்.

News April 26, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 26 | ▶ சித்திரை – 13 ▶கிழமை: வெள்ளி| ▶திதி: துவிதியை ▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: காலை 10:30 – 12:00 வரை ▶எமகண்டம்: மாலை 03:00 – 04:30 வரை ▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை ▶சந்திராஷ்டமம்: ரேவதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News April 26, 2024

விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது

image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுக்களுடன், விவிபேடில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் 100% சரிபார்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியாகிறது. சில நாள்களுக்கு முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது ஏற்று கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை இன்று ஒத்திவைத்தனர்.

News April 26, 2024

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை அதிகரிக்கணும்

image

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சினிமாவிலும் கஷ்டம் என்று வந்தால் தற்கொலை தான் தீர்வு என்பது போன்று சுட்டிக்காட்டுகின்றனர். இது, தவறான உதாரணமாக மக்களிடத்தில் பிரதிபலிக்கிறது. இதே போன்ற நிலை நீடித்தால் அடுத்த, 10 ஆண்டுகளில் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகமாகுமென எச்சரித்துள்ளார்.

News April 26, 2024

யாரெல்லாம் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கக் கூடாது?

image

பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது நீரிழிவு நோயாளிகளும், அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

News April 26, 2024

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

image

தமிழகத்தை அதிர வைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களை உயர்க்கல்வி புள்ளிகளுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்ற வழக்கில் நிர்மலாதேவியுடன், பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்கு இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

News April 26, 2024

கெஜ்ரிவாலை 24 மணிநேரமும் கண்காணிக்கும் கேமரா!

image

திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் பிரதமர் அலுவலகமும், ஆளுநரும் கண்காணித்து வருவதாக ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் துணைநிலை ஆளுநர் சக்சேனா ஆகியோருக்கு தனித்தனியாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கெஜ்ரிவாலை மோசமாக நடத்துவதாகவும், திகார் சிறை கொடுமைகளின் கூடாரமாக மாறிவிட்டதெனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News April 26, 2024

தான்சானியாவில் வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி

image

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 155 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழை மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 26, 2024

ஏப்ரல் 26 வரலாற்றில் இன்று!

image

➤ 1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜான் வில்க்ஸ் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர். ➤ 1903 – அட்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது. ➤ 1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது. ➤ 1986 – சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுஉலை விபத்து இதுவாகும்.

error: Content is protected !!