India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இது இந்தியாவுக்கான காலம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் நவாடாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமாருடன் மோடியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தற்போது இந்தியாவுக்கான காலம் என்றும், இந்த வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்றும் தெரிவித்தார். அதேபோல், இந்த மக்களவைத் தேர்தல், நாட்டு மக்களுக்கு மிக முக்கிய தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
RCB அணியின் தொடர் தோல்விகளுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையாவின் செய்த பாவங்களே காரணம் என்று நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கூறிவருகின்றனர். ‘பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு, மல்லையா செய்த பாவம் ஆர்சிபி-க்கு’ என்பன போன்ற பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த மல்லையா 2008 – 2016 வரை RCB அணியின் உரிமையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 3.72 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ₹500 கோடி மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டம், ஜூலை 31 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும், பெரிய ரக மூன்று சக்கர வாகனங்களுக்கு 50,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் செய்யாததையா, மக்களவை தேர்தல் முடிந்து செய்ய போகிறார்கள்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பதிவில், ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியை முதல்வர் ஸ்டாலின் கடைப்பிடிப்பதாக சாடினார். மேலும், திமுகவின் நாடகத்திற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மயங்க மாட்டார்கள், தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் எனவும் கூறினார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்குவித்தோர் பட்டியலில் மும்பை வீரர் ரோஹித் ஷர்மாவை ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் முந்தியுள்ளார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 11,225 ரன்களுடன் ரோஹித் 8ஆவதாக இருந்தார். இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளாசிய சதம் மூலம், பட்லரின் மொத்த ரன்களின் எண்ணிக்கை 11,281ஆக உயரவே, ரோஹித்தை 9வது இடத்துக்கு பின்தள்ளி, 8வது இடத்தை பிடித்தார்.
பொருளாதார பலத்தில் பிரிட்டனையே இந்தியா விஞ்சி விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். அரியலூர் கூட்டத்தில் பேசிய அவர், 200 ஆண்டுகாலம் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டனை பொருளாதார பலத்தில் இந்தியா தோற்கடித்து விட்டதென்றார். உலக அளவில் பொருளாதார பலத்தில் தற்போது 5ஆவது இடத்திலுள்ள இந்தியா, மோடி 3வது முறையாக பிரதமரானதும் 3வது இடத்துக்கு வருமென்றும் அவர் கூறினார்.
பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார்ன் தாரனில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை அவரின் குடும்பத்தினர் சம்மதம் இன்றி திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்து, இளைஞரின் தாயாரை பெண்ணின் குடும்பத்தினர் தாக்கி அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்றனர். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு உடைந்த சீட் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் ஜன்னலோர இருக்கையை கூடுதலாக ₹1,000 செலுத்தி அவர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் விமானத்திற்கு சென்று பார்த்தபோது, சீட் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை பொறியாளராலும் சரி செய்ய முடியவில்லை என ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
லக்னோ வீரர் கே.எல். ராகுல் ஜீப்பில் இருக்கும் ஸ்பேர் டயர் போன்றவரென சித்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜீப்பின் பின்னால் உள்ள ஸ்பேர் டயரை அவசர நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அதுபோல கே.எல். ராகுலை அணியில் எந்த இடத்திலும் நம்பி களமிறக்கலாம், விக்கெட் கீப்பராக விளையாட சொல்லலாம் என்றும், இந்த திறமை வேறு யாரிடமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் வருவதால், திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். கோடை விடுமுறையில் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.