news

News April 7, 2024

மும்பை அணி புதிய சாதனை

image

டி20 போட்டிகளில் 150 வெற்றிகள் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 148 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணியும் மூன்றாவது இடத்தில் 144 வெற்றிகளுடன் இந்திய அணியும் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த அணி எது?

News April 7, 2024

இதுதான் இமாலய சாதனையா?

image

பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார். மோடியின் அமைச்சரவையில் 11 பெண்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பேர் மட்டுமே பெண்கள். இதுதான் இமாலய சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 7, 2024

குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு

image

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் – லக்னோ அணிகள் மோதும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். ராகுல் – 33, பூரன் – 32 ரன்கள் குவித்தனர். குஜராத் அணியின் நல்கண்டே, உமேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News April 7, 2024

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

image

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ஆராய்ச்சி விஞ்ஞானி, திட்ட அறிவியலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட 71 பணியிடங்கள், தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வயது, கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <>https://www.isro.gov.in/<<>> என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க நாளை (ஏப்.8) கடைசி நாளாகும்.

News April 7, 2024

திமுகவின் பினாமியாக மாறிய செல்வப்பெருந்தகை!

image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவின் பினாமியாகச் செயல்படுகிறார் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் பாமக வேட்பாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், ‘ஸ்டாலினும், உதயநிதியும் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அறிவாலயத்தின் ஒட்டுத்திண்ணையாகக் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது’ என்றார்.

News April 7, 2024

ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்ட இருவர் பலி

image

சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான புயல் வீசி வருகிறது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான்சங்க் நகரில் 60 வயது மூதாட்டி மற்றும் அவரது 11 வயது பேரன் குடியிருப்பில் இருந்தபோதே படுக்கை விரிப்போடு சேர்த்து ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News April 7, 2024

தொடர் தோல்விகளை எப்படி பார்க்கிறார் சீமான்?

image

எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களைக்கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்து பேட்டி அளித்த சீமான், தோல்விகள்தான் வெற்றியின் தாய் என்றார். எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெலிதாக இருக்கும். ஆனால், தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விட உறுதியாக இருக்கும் என தனக்கே உரித்தான நடையில் விளக்கினார்.

News April 7, 2024

குட்டி யானையை குளிப்பாட்டிய ராம் சரண்

image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு இந்தியா முழுமைக்கும் பிரபலமான இவர், சமீபத்தில் மனைவி மற்றும் மகளுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள யானைகள் முகாமில் குட்டி யானையை ராம் சரண் குளிப்பாட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மனைவி உபாசனா, சிறந்த அனுபவம் வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

மோடிக்கு இது மக்களின் உத்தரவாதம்

image

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல் என்றார். ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம் என தெரிவித்தார்.

News April 7, 2024

சண்டே சமையல் டிப்ஸ்..!

image

ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும். கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருக்க சிறிதளவு உப்பை கலந்து வைக்கலாம்.

error: Content is protected !!