news

News April 8, 2024

புறக்கணித்த சசிகலா… வேதனையில் தினகரன்!

image

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென குறுக்கிட்டு பிரசாரத்துக்குச் செல்லக் கூடாது என்று சசிகலாவை தடுத்தாராம். இதனால், தினகரன் மன வேதனையில் உள்ளாராம்.

News April 8, 2024

அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் (1)

image

மக்களவையில் மொத்தம் 543 எம்பி இடங்கள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அங்கு இருந்து எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இதனால் அந்த மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு அதிகபட்சமாக 80 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 17 தனித் தொகுதிகளும் அடங்கும்.

News April 8, 2024

அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் (3)

image

அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் 6ஆவது இடத்தில் உள்ளது. அங்கு 29 தொகுதிகள் உள்ளன. இதையடுத்து 7ஆவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 28 தொகுதிகளும், 8ஆவது இடத்தில் உள்ள குஜராத்தில் 26 தொகுதிகளும், 9ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் தலா 25 தொகுதிகளும் உள்ளன. 10ஆவது இடத்தில் ஒடிசாவும் (21 தொகுதிகள்), 11ஆவது இடத்தில் கேரளாவும் (20 தொகுதிகள்) உள்ளன.

News April 8, 2024

கூடுதல் கட்டணம்.. தமிழக அரசு புதிய உத்தரவு

image

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் கட்டண வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோவாட் மேல்நிலை கேபிள்மூலம் மின் இணைப்பு பெற ₹2,040, நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெற ₹5,110ம் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் இதைவிட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

News April 8, 2024

ரஷ்ய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

image

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. உக்ரைன் வசமிருந்து கடந்த 2022இல் ரஷ்யா கைப்பற்றிய ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது நடந்த தாக்குதலில், 3 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை, கதிர்வீச்சு கட்டுக்குள் உள்ளதென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 8, 2024

எல்.ஐ.சி ஏஜெண்ட் டூ மூத்த கோடீஸ்வரர்

image

இந்தியாவின் வயது முதிர்ந்த கோடீஸ்வரராக 93 வயதில் மறைந்த லக்‌ஷ்மன் தாஸ் மிட்டலை (₹24,070 கோடி சொத்து) ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றிய அவர், தனது 60ஆவது வயதில் தன் சொந்த சேமிப்பை வைத்து சோனாலிகா என்ற டிராக்டர் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது, 5 நாடுகளில் தயாரிப்பு ஆலைகளையும், 120 நாடுகளில் விற்பனை சந்தையையும் அந்நிறுவனம் கொண்டுள்ளது.

News April 8, 2024

இன்று களமிறங்கும் முஸ்தஃபிசுர், பதிரனா

image

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், CSK அணியின் நட்சத்திர பவுலர்களான முஸ்தஃபிசுர், பதிரனா ஆகியோர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்துக்கு எதிரான கடைசி போட்டியில், இருவரும் களமிறங்காததால் தான், போட்டியில் தோல்வி அடைந்ததாக பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் இருவரும் களமிறங்க உள்ளதால், CSK அணிக்கு மேலும் பலம் சேர்ந்துள்ளது. இன்று யார் வெற்றி பெறுவார்?

News April 8, 2024

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை

image

தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்றோடு (08.04.2024) நிறைவு பெறுகிறது. ஆகையால், நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும், ஆசிரியர்களும் பிரியா விடை அளிக்க உள்ளனர். அடுத்த கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பு (அ) பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர்.

News April 8, 2024

வட இந்தியாவிலும் பாஜக மண்ணை கவ்வும்

image

வடக்கிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெறும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பாசிச போக்கை தமிழ்நாடு, கேரள மக்கள் இணைந்து முறியடிப்பார்கள். இரண்டு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என்ற அவர், இந்த வெற்றி இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் என்றார். மேலும் பேசிய அவர், கூட்டணிக்கு யார் தலைவர், யார் பிரதமர் போன்ற கேள்விகள் தற்போதைக்கு அவசியமில்லாதது என்றும் தெரிவித்தார்.

News April 8, 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்றுடன் (ஏப்.8) நிறைவடையவுள்ளது. மாா்ச் 26ஆம் தேதி தொடங்கிய இந்தத் தோ்வை, சுமாா் 9.1 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்ட நிலையில், கடைசி நாளான இன்று சமூக அறிவியல் தோ்வு நடைபெறவுள்ளது. ஏப்.12 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கவிருக்கிறது. மே 10ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

error: Content is protected !!