India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 இல் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் மக்கள் ஆதரவால் தான் அதிமுக வென்றதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் பாமகவின் துணையால் தான் அதிமுக ஆட்சியை தக்க வைத்தது என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இபிஎஸ், “2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்? காரணம் பாமகவுக்கு மக்கள் ஆதரவில்லை” எனக் கூறினார்.
தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ₹400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்கள் உட்பட 40 இடங்களுக்கு மேல் சோதனை நடைபெற்றது. இதில், ₹5 கோடி ரொக்கம், ₹5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
‘துருவ நட்சத்திரம்’ படம் தள்ளிப் போவது வருத்தம் அளிப்பதாக நடிகை ரித்து வர்மா வேதனை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நாம் அனைவரும் இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். நான் கௌதம் வாசுதேவ் மேனனின் தீவிர ரசிகை. அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர் படத்தில் கதாநாயகியாக அதுவும் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பது ஒரு சிறந்த அனுபவம்” எனத் தெரிவித்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரி புரூக், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்க வீரர் லிசாட் வில்லியம்ஸ், அணியில் இணைந்துள்ளார். 2021இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வில்லியம்ஸ், இதுவரை 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முதல் முறையாக ஐபிஎல்லில் களமிறக்கும் இவர், தனது கால் தடத்தை பதிப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக மக்கள் மீதான அன்பு காரணமாகவே, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தேர்தலை மனதில் வைத்தே மோடி அடிக்கடி தமிழகம் வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்த அனுராக், “தமிழக மக்கள் மீதான அன்பினாலும், தமிழகம் வளரவுமே பிரதமர் அடிக்கடி வருகிறார். இதை முதல்வர் விமர்சித்திருப்பது கவலை தருகிறது” என்றார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஜூஸ் கடைகளைத் தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விற்பனை & லாபத்தை மனதில் வைத்து சில கடைகளில் கெட்டுப்போன பழங்கள், தூய்மையற்ற நீர் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை குடிக்கும் மக்களுக்கு அம்மைப் போன்ற நோய்கள் ஏற்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது. எனவே கடைகளை தேடாமல் வீட்டிலேயே ஜூஸ் செய்து எடுத்துச்செல்லுங்கள். >>SHARE
பால் தாக்கரே கொள்கைகளை கைவிட்டதால் உத்தவ்வை எதிர்த்ததாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் உத்தவ் ஆட்சியமைத்து இருந்தபோது, அவரை எதிர்த்து 2022இல் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஷிண்டே விலகினார். பின்னர் பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானார். இந்நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், வீட்டு வேலையாள் போல தங்களை உத்தவ் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கார்கள் விற்பனை புதிய உச்சம் கண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் 36,40,399 கார்கள் விற்பனையாகி இருந்தன. அதை விஞ்சும் வகையில், 2023-2024 நிதியாண்டில் 39,48,143 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 8.45% அதிகமென்றும், இந்தியாவில் கார்கள் இந்தளவு அதிகமாக விற்பனையாகியிருப்பது இதுவே முதல்முறை என்றும் ஆட்டோ மொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, குற்றவியல் சட்டம் (Cr.P.C) 110 பிரிவின் கீழ், கோவையில் 350 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மனித உரிமை வழக்குரைஞர் ரகுநாத், “இந்த வழக்குகள் பெரும்பாலும் சமூக செயற்பாட்டாளர்கள், தலித் & இஸ்லாமிய இளைஞர்கள் மீது பதியப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் போராடுவோரை ஒடுக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இடைக்கால ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த மாதம் ED கைது செய்தது. இந்நிலையில், தனது மகனுக்கு தேர்வுகள் வருவதால் அவருடன் இருக்க வசதியாக ஜாமீன்கோரி கவிதா மனு தாக்கல் செய்திருந்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Sorry, no posts matched your criteria.