India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை நித்யா மேனன் இன்று தனது 38ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் ‘DearEXes’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் & போப்டர் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் காமினி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மக்கள் தந்த அதிகாரத்தை சரியான வழியில் பயன்படுத்திய அரசியல்வாதிகளின் பயோபிக்கில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார். ஊடகமொன்று அளித்த பேட்டியில், “இந்தியாவில் பல நல்ல மக்கள் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை இப்போது இருக்கும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்” என்றார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை விற்போம் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இது தொடர்பான பிரசாரத்தின் போது பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, அதை செய்யாமல் மதுபானங்களின் விலையை மட்டும் உயர்த்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடவில்லை. ஆல்ரவுண்டரான அவர், ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் எடுத்ததுடன், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ரஞ்சி போட்டியில் அவரது செயல்பாடு மந்தமாகவே இருந்தது. இதனால் நடப்பு சீசனில் அவர் மும்பை அணியில் இடம் பிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் சிறுபான்மையினருக்கு எந்த தீங்கும் நடக்கவில்லை என முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளருமான ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியால் தான் அதிமுக தோற்றது என்பது தவறான கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் செளதரி வீரேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைகிறார். உ.பியைச் சேர்ந்த அவர், பாஜக அரசில் 2 முறை மத்திய அமைச்சராக இருந்தார். இதனிடையே, துஷ்யந்த் செளதாலா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகியிருக்கிறார். அவருடைய மகன் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்துவிட்ட நிலையில் வீரேந்திர சிங் நாளை இணையவுள்ளார்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 152 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 22,666 புள்ளிகளை எட்டியது. கடந்த ஒரு மாதமாகவே சர்வதேச பங்குச்சந்தைகள் தினமும் புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. தற்போது உலக பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதால் தங்கம் விலை, பங்குச்சந்தை ஆகியவை உயர்ந்து வருகின்றன. இன்னும் சில தினங்களுக்கு இதே மாதிரியான முன்னேற்ற போக்கு நிலவும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்ததும் முதல் நடவடிக்கையாக 30 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படுமென காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ம.பி.,யின் சியோனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பாஜகவினர் அதை உங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலை தருகின்றனரே தவிர, அரசு வேலையை தரவில்லை எனவும் சாடினார்.
போட் (Boat) நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் கசிந்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் ஸ்பீக்கர், ஹெட்போன், இயர்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை போட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திய 75 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததை, ஷாப்பிஃபை கை (Shopify GUY) என்ற ஹேக்கர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
சீரடி சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்ற அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.