India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. சேலம் – 41.7 டிகிரி செல்சியஸ்(dC), ஈரோடு – 41.6 dC, திருப்பத்தூர் – 41.4 dC, திருச்சி – 40.7 dC, நாமக்கல் – 40 dC, மதுரை – 41.2 dC, கரூர் பரமத்தி – 41 dC, தருமபுரி – 40.7 dC, கோவை – 38.9 dC, பாளையங்கோட்டை – 38.8 dC மற்றும் தஞ்சை, திருத்தணி, வேலூர், மதுரை ஏர்போர்ட்டில் தலா 39.6 dC வெப்பம் பதிவாகியுள்ளது.
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ‘சிக்பள்ளாப்பூர்’ தொகுதியில் போட்டியிட காங்., மேலிடத்தில் வாய்ப்பு கேட்டார். கட்சி மேலிடம் மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும், சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் ரக்ஷா ராமையாவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் புவனேஷ்குமார் முதலிடத்தில் உள்ளார். அவர் 116 போட்டிகளில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து, போல்ட் 26 விக்கெட்டுகள், பிரவீன்குமார் 15 விக்கெட்டுகள், ஜாகீர் கான் 14 விக்கெட்டுகள், தீபக் சாகர் 13 விக்கெட்டுகள், சந்தீப் சர்மா 13 விக்கெட்டுகள், மலிங்கா 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
A இரத்த வகையைக் கொண்டவர்கள், பலருக்கு முன் மாதிரியாகவும், தன்னைவிட பிறர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். B இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் பொதுவாக நட்பானவர்கள். இவர்களில் பலர் பிடிவாத தன்மையுடன் இருப்பார்கள். AB இரத்த வகையினர் புத்திசாலித்தனத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பர். O இரத்த வகையைச் சேர்ந்த பெரும்பாலானோர் மக்களின் நம்பிக்கையுடன் இருப்பர். மற்றவர்களை மகிழ்விக்கவும் விரும்புவர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏப்ரல் 17, 18-இல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல 7,154 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 3,060 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அணியில் சில மாற்றம் செய்யப்பட்டு முஸ்தஃபிசுர், ஷர்துள், ரிஸ்வி ஆகியோர் களமிறங்குகின்றனர். மொயின் அலி, சிவம் டூபே, தீபக் சாஹர் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. விளையாடும் வீரர்கள்: ரச்சின், ருதுராஜ், ரஹானே, மிச்சேல், ரிஸ்வி, ஜடேஜா, தோனி, ஷர்துள், முஸ்தஃபிசுர், தேஷ்பாண்டே, தீக்ஷனா.
பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தும் தேர்வுகள் மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் காரணமாக தேர்வுகள் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூனியர் இஞ்சினியர் தேர்வுகள் ஜூன் 5,6,7 ஆகிய தேதிகளிலும், Selection Post தேர்வுகள் ஜூன் 24,25,26 ஆகிய தேதிகளிலும், மத்திய ஆயுதப்படை, டெல்லி போலீஸ் (SI) தேர்வுகள் ஜூன் 27,28,29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் CSK – KKR அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற CSK கேப்டன் ருதுராஜ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் KKR அணி பேட்டிங் செய்ய உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற CSK, அதன்பின் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
பொறியியல் படிப்புக்கான கட்டணம் 25% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால், வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் ₹50000, நிர்வாக ஒதுக்கீட்டில் ₹85000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நான் எந்த கட்சியிலும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை என நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் தத் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், “நான் அரசியலுக்கு வர முடிவு எடுத்தால், நிச்சயம் அதை அறிவிப்பேன். என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.