India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “2004 ஏப்ரல் 26 அன்று கூகுளில் பணிக்குச் சேர்ந்தேன். தொழில்நுட்பம், பயனர் எண்ணிக்கை, என் தலைமுடியின் நிறம் என நிறைய மாறிவிட்டது. ஆனால், நான் இன்றும் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தேர்தலுக்குப் பின் பாஜக டெல்லி தலைமையின் உத்தரவின் கீழ் உளவுத்துறை சர்வே ஒன்றை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சர்வே மூலம், பாஜகவுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு சாதகமாக அமையவில்லை என்ற நிலவரத்தை மேலிடம் அறிந்துகொண்டுள்ளது. அத்துடன், வேட்பாளர்களிடம் கூடுதல் தகவலைச் சேகரித்த உளவுத்துறை, பணப் பரிவர்த்தனையில் நடந்த குளறுபடிகளை வாக்குமூலமாகப் பெற்று, அதையும் டெல்லிக்கு அனுப்பியுள்ளதாம்.
ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போனின் தீவு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மத்திய டோக்கியோவில் உணரப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உ.பியில் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லியில் இன்றிரவு நடக்கும் அக்கட்சியின் தேர்தல் குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம், ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பியபோது, “இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்” என்றார்.
அரசியலமைப்புச் சட்டம் குறித்து பாஜக, மோடி இடையே முரண்பாடு நிலவுவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். குஜராத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருவதாகவும், ஆனால் இதற்கு முரணாக மோடி பேசுகிறார் என்றும் தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் பலவீனப்படுத்த அவர்கள் விரும்புவதாகவும் பிரியங்கா காந்தி சாடினார்.
இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும், அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் டிச.8, 2023இல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது விலை கட்டுக்குள் வந்ததால், இலங்கை, வங்கதேசம், பூடான், உள்ளிட்ட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது. நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மாமா இறந்து விட்டதால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 13 நாள் ஜாமின்கோரி, நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்து விட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், NDA கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது எதிர்கட்சிகளை ஏமாற்றமடைய செய்யும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலில் மோடியின் ஆட்சி எனக் கூறியவர்கள், பின் பாஜகவின் ஆட்சி என்றார்கள், தற்போது NDA கூட்டணி ஆட்சி எனக் கூறுவதாக விமர்சித்துள்ளார்.
அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில், 60 வயது பெண் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லா பிளாட்டா நகரை சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ், 60 வயதிலும் அச்சு அசலாக இளம்பெண் தோற்றத்துடன் அழகாக காணப்படுகிறார். இதனால், அவர் பியூனஸ் அயர்ஸ் மாகாண அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவே, சிறந்த அழகியாக தேர்வாகி க்ரீடம் சூட்டப்பட்டார்.
தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் குறித்து தவறான கருத்துகளைத் தெரிவிப்பது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தானில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.