India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வறட்சி பாதித்த 22 மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளால் குடிநீர் வழங்கலில் சுணக்கம் ஏற்படக் கூடாது எனக் கூறியுள்ள அவர், கூட்டுக் குடிநீர்த் திட்ட, நீரேற்ற நிலையங்களுக்குச் சீரான மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கோடைகாலம் முடியும் வரை லாரிகள் மூலம் மக்களுக்குக் குடிநீர் வழங்க அவர் ஆணையிட்டுள்ளார்.
நிலையற்ற வாழ்க்கையில் மருத்துவக் காப்பீடும், ஆயுள் காப்பீடும் தேவை எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பலர் ஆயுள் காப்பீடு எடுக்க முன் வந்தாலும் காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்வதில் சந்தேகம் இருக்கிறது. இதற்கு, ’20X காப்பீடு’ விதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஆண்டு வருமானத்தின் 20 மடங்குக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முன் மக்களுக்கு அதைப்பற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அரிசியை யார் சாப்பிடலாம் என்பதில் அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பே ரேஷனில் விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
MI அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் DC அணி 5.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்களை குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஃப்ரேஸார் மெக்குர்க் 15 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். ஏப்ரல் 20ஆம் தேதி நடந்த SRH அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் 15 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார். இதே நிலையில் டெல்லி பேட்டிங் செய்தால், 20 ஓவரில் 300 ரன்களை தாண்டிவிடும்.
பாஜகவின் ‘400 சீட்டு’ படம் தோல்வி அடைந்துவிட்டதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பிரதமர் பொய்களைக் கூறி வருவதாக தெரிவித்த அவர், 2ஆம் கட்டத் தேர்தல் பாஜகவுக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை கொடுத்துள்ளதாகவும் விமர்சித்தார். முன்னதாக 400 இடங்களை தனித்து வெல்வோம் என்ற மோடி, 2 கட்டத் தேர்தலுக்கு பிறகு என்டிஏ மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் வெடிக்காத குண்டுகளை முழுமையாக அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. வல்லுநர் பெஹர் லோதாமர் தெரிவித்துள்ளார். ஐ.நா. கண்ணிவெடி அகற்றல் பிரிவிடம் பெஹர் அளித்த அறிக்கையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் சண்டையில் காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளின் எடை 3.7 கோடி டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்துக்காக போராடாத பாஜக, தேசப்பற்று குறித்து அதிகம் பேசுவதாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சுதந்திரத்துக்கும், வளர்ச்சிக்கும் பாஜக எதையும் செய்யவில்லை என்றும், காங்கிரசே நாட்டை கட்டமைத்தது என்றும் கூறினார். அப்படியிருக்கையில், தேசப்பற்று குறித்து அதிகம் பேசிக்கொண்டு, நேரு, இந்திரா காந்தி, சாஸ்திரியை பாஜக விமர்சிக்கிறது என்றார்.
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியால் நாட்டுக்கு சாதனை என்று எதுவுமில்லை என்ற அவர், நாட்டின் மானம் தான் பறிபோனதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக என்றாலே அட்சதை மற்றும் காவி நிறம் மட்டுமே என்றும் அவர் கேலி செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேசிஆர் மகள் கவிதாவை ED கைது செய்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டியதில்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டியா எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், அதில் தோல்வியடைந்து விட்டார் என்றும் குறிப்பிட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டையும், சர்வதேசப் போட்டிகளையும் ஒன்றாகக் கருதி நாம் குழம்புவதாகவும், ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளதென்றும் பதான் கூறினார்.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து DC அணி பேட்டிங் செய்ய உள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற DCக்கு எதிரான போட்டியில் MI வெற்றிபெற்றது. அந்த தோல்விக்கு இன்று டெல்லி பதிலடி கொடுக்குமா? இதுவரை ஆடிய போட்டிகளில் 4 வெற்றிகளுடன் DC 6 ஆவது இடத்திலும், 3 வெற்றிகளுடன் MI 9 ஆவது இடத்திலும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.