India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வடக்கு, மேற்கு இந்தியாவில் அக்கட்சியை I.N.D.I.A கூட்டணி கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. எதிர்க்கட்சிகளிடம் பாஜகவை வீழ்த்த போதிய திட்டம் எதுவும் இல்லை” என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் கேப்பை CSK வீரர் முஸ்தஃபிசுர் பெற்றுள்ளார். KKR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில், 9 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2.சாஹல்-8, 3.கலீல் அஹமது-7, 4.மோஹித் ஷர்மா-7, 5.ஜெரால்டு கோட்ஸி-7 ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
‘ஸ்கின்’ என்ற அழகு சாதன நிறுவனத்தை தொடங்கிய நடிகை நயன்தாரா, தற்போது அதற்காக புது அலுவலகம் ஒன்றை கட்டியுள்ளார். தனது வீட்டு மொட்டை மாடியில், முற்றிலும் கண்ணாடிகளாலான பிரம்மாண்ட அலுவலகத்தை திறந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. அதுவும் வெறும் 30 நாள்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் நடத்தப்படும் இச்சோதனை திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெயில் காலத்தில் ஏற்படும் சின்னம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது நுங்கு. கோடையில் அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். இளநீர் வழுக்கைத் துண்டுகள், நுங்கு, பனை வெல்லம் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் தேங்காய் பாலை ஊற்றி, சில நுங்கு துண்டுகளை சேர்த்தால் சுவையான நுங்கு பால் சர்பத் ரெடி.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில், ரஜினிக்கு வில்லனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஜினியின் 171ஆவது படமான இது, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும், ஷாருக்கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
5,990 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். தேர்வு முடிவுகளை <
பிரதமர் மோடி 6வது முறையாக இன்று மாலை 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை மாலை ரோடு ஷோவில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை வேலூர், நீலகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி என மத்திய அமைச்சர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், அல்-நாசர் அணி தோல்வி அடைந்துள்ளது. அல்-ஹிலால் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அல்-ஹிலால் அணி முன்னிலை வகித்தது. எதிரணி வீரரை தாக்கிய ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். இறுதி நிமிடத்தில் அல்-நாசர் அணி 1 கோல் அடித்து, 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த நேரடி விவாதத்திற்கான அழைப்பை காங்., எம்.பி. சசி தரூர் ஏற்பதாக அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பேசிய அவர், “நேருக்கு நேர் விவாதத்திலிருந்து நழுவி ஓடிக்கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில், விலைவாசி உயர்வு, ஊழல், வகுப்புவாத அரசியலை பரப்பும் பாஜகவின் கொள்கைகள் குறித்து வெளிப்படையாக பேசுவோம்” என்றார்.
Sorry, no posts matched your criteria.