India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ திரைப்படம், வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இதற்கு, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தற்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி தான் உலகில் அதிகமான நபர்களால் மிகவும் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரே ரசல் புகழாரம் சூட்டியுள்ளார். KKR அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தின்போது, தோனி பேட்டிங் செய்ய வந்தது தெரிந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து, சத்தம் எழுப்பினர். வைரலான இந்த காட்சியை ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்து, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அதிகளவில் வெப்பம் இருப்பதால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 20,125 மெகாவாட் மின்தேவை பதிவாகியுள்ளது. ஏப்.5ல் 19,580 மெகாவாட் ஆக இருந்த மின் நுகர்வு 3 நாள் இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பூஜ்ஜியம் என்ற கருத்துக்கு முதலில் இலக்கத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். குவாலியர் கோட்டையில் பூஜ்ஜியம் குறித்த ஆதாரம் உள்ளது. பூஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. ஆனாலும், தரையில் கற்களைக் கொண்டு கணக்கீடு செய்தபோது பூஜ்ஜியம் உருவானதாக நம்பப்படுகிறது. பூஜ்ஜிய வடிவ கற்களை தரையில் வைக்கும்போது விழும் உருண்டையான அச்சுகளில் இருந்து பூஜ்ஜியம் உருவானதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிச்சனூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், “மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் திமுக அலை வீசுகிறது. வடக்கில் I.N.D.I.A கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.
ஐபிஎல் வரலாற்றில், 1,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளை பிடித்து, CSK வீரர் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அபாரமாக பந்துவீசி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஃபில் சால்ட், ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது கேட்சுகளை பிடித்து இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை எந்தவொரு வீரரும் படைத்ததில்லை.
சொந்த மகன் மற்றும் மகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் முதல்வர் ஸ்டாலின் முதலில் தனது வீட்டில் சமூக நீதியை நடைமுறைப்படுத்தட்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், “பெண்ணுரிமை, சமத்துவம், சம உரிமை, இட ஒதுக்கீடு, ஜனநாயகம் என மேடைகளில் வசனம் பேசும் ஸ்டாலின், தனது மகனை மட்டும் அமைச்சராக்கியுள்ளார். அவர் ஏன் தனது மகளை அரசியலுக்கு கொண்டு வரவில்லை” என்றார்.
இந்துத்துவா படங்களை திரையிட்டு தேர்தல் நேரத்தில் பாஜக பதற்றத்தை உருவாக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதுமே படங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தி வந்த வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் திராவிட இயக்கங்கள் படங்கள் மூலம் தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தன. ஆனால், திரைப்படங்கள் தேர்தலில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நடுத்தர வகுப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் வெள்ளியின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் வெள்ளியின் விலை 7.19% உயர்ந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் 3 மாதத்தில் மட்டும் 11% விலை ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹88,000ஆக இருக்கும் சூழலில், இது ரூ.1 லட்சம் வரை உயரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் 2ஆம் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முதல் முறையாக வரலாற்று உச்சமாக பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381.78 புள்ளிகள் உயர்ந்து 75,124.28 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 98.80 புள்ளிகள் உயர்ந்து 22,765.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.