news

News April 9, 2024

முதல் படத்தில் மட்டும் தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும்

image

நடிகரின் வாரிசு என்பதால் முதல் படத்தில் மட்டும் தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என ப்ருத்விராஜ் தெரிவித்துள்ளார். தனது தந்தை சுகுமாரன் (மலையாள நடிகர்) மூலம் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறிய அவர், அதன் பிறகு கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். இந்த விஷயங்களை தான் நானும், துல்கர் சல்மானும் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

News April 9, 2024

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

image

சென்னையில் வாகனப் பேரணி மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மாலை 6.30 மணிக்கு தி.நகர் பனகல் பார்க்கில் பேரணியை தொடங்கும் அவர், தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிமீ ஊர்வலம் செல்கிறார். அப்போது, சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தமிழிசை உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். அதைத் தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு தங்குகிறார்.

News April 9, 2024

டி20 WC: இந்திய அணியில் விராட் கோலி

image

WC டி20 தொடருக்கான இந்திய அணியில், விராட் கோலி இடம்பெறுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மே.இ.தீகள் மற்றும் அமெரிக்காவில் T20 தொடர் நடைபெற உள்ள நிலையில், மே.இ.தீவுகள் மைதானத்தில் கோலியால் சரியாக விளையாட முடியாது எனவும், அதனால் அணியில் அவருக்கு இடமில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை பார்த்த BCCI, WC அணியில் கோலியை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News April 9, 2024

சீனாவால் ஒரு இன்ச் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை

image

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், சீனாவால் ஒரு இன்ச் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாமில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். 1962ஆம் ஆண்டு சீனாவால் அசாம் மற்றும் அருணாச்சல் ஆக்கிரமிக்கப்பட்டபோது நேரு அமைதியாக இருந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், எல்லை ஊடுருவலை பாஜக தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

News April 9, 2024

கார் கவிழ்ந்து 3 பேர் பலி

image

கோவில்பட்டி அருகே இலந்தைக்குளம் பகுதியில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சிவகாசி சென்று திரும்பியபோது, இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ரவீந்திரன், அவரது மனைவி ரமணி, தாயார் சேர்முகம் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 9, 2024

இந்திய குடும்பங்களில் கடன் அதிகரிப்பு

image

இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தில் குடும்ப கடன்கள் 40% வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அதே நேரம், குடும்ப சேமிப்பு 5.1% குறைந்துள்ளது. விலை ஏற்றத்தால் வீடு, வாகனங்கள் போன்ற சொத்துகளை வாங்க மக்கள் அதிக கடன் பெறுவதால் சேமிப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 9, 2024

இதுதான் மோடியின் உத்தரவாதமா?

image

தேர்தலுக்குப் பின் ஊழலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறிய முறை ஏற்கத்தக்கதல்ல என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதுதான் மோடியின் உத்தரவாதமா? தேர்தலுக்குப் பிறகு பாஜகவினரை சிறையில் அடைப்பேன் என கூறினால் என்னவாகும்? ஆனால், ஜனநாயகத்திற்கு எதிரான இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் கூற மாட்டேன் என தெரிவித்தார்.

News April 9, 2024

FDக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

image

ஹெச்டிஎஃப்சி வங்கி 18 முதல் 21 மாத கால அளவிற்கான வைப்புத் தொகைக்கு 7.25% வட்டி வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி 15 மாத வைப்புத் தொகைக்கு 7.20% வட்டி தருகிறது. கோடக் வங்கி 390 நாள்கள் முதல் 391 நாள்களுக்கு 7.4% வட்டியும், பஞ்சாப் நேஷ்னல் வங்கி 400 நாள்களுக்கு 7.30% வட்டியும் தருகிறது. ஸ்டேட் பேங்க்கை பொருத்தமட்டில் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 7% வட்டி வழங்குகிறது.

News April 9, 2024

சற்று நேரத்தில் சென்னையில் ரோடு ஷோ

image

பிரதமர் மோடி இன்று மாலை 6.30 முதல் 7.30 மணி வரை சென்னையில் சாலைப் பேரணி செல்கிறார். 6.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், 6.30 மணிக்கு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் இருந்து பேரணியை தொடங்குகிறார். தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிமீ ஊர்வலமாக வரும் மோடி, சென்னை பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். பின்னர் கிண்டி ராஜ் பவனில் இரவை கழிக்கவுள்ளார்.

News April 9, 2024

முதல்வர் ஸ்டாலின் மீது புகார்

image

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்ட அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தேர்தல் விதிகளை மீறிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!