India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து இடஒதுக்கீட்டைப் பறிக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “மோடிக்கு நெருக்கமான பாஜக தலைவர்களின் பேச்சுகளில் இருந்து அவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. பாஜகவிடமிருந்து அரசியல் சாசனத்தையும், இடஒதுக்கீட்டையும் பாதுகாக்க இறுதிவரை காங்., போராடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ₹6,304 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுள்ளனர். அதே போல, ₹10,640 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களையும் விற்றுத் தீர்த்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 4.7%ஆக உயர்ந்துள்ளதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் முதலீடு செய்வதாகச் சந்தைச் சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மே 9ஆம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். பத்ம பூஷன் விருது பெற மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்ததையடுத்து, விருதை பெற நானும், விஜய பிரபாகரும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜயகாந்த் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், 9ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
எவரெஸ்ட், எம்.டி.எச்., போன்ற இந்திய நிறுவனங்களின் மசாலா பொருள்களின் தரத்தை அமெரிக்க உணவு பாதுகாப்பு மையம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்களின் மசாலா பொருள்களில், புற்றுநோயை உண்டாக்கும் உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன. தற்போதைய நிலையில், அப்பொருள்களின் தரம் குறித்து அமெரிக்க அரசு ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்துக் காங்கிரஸ் பொய்யான தகவலைப் பரப்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் பெலகாவியில் பிரசாரம் செய்த அவர், மின்னணு வாக்கு இயந்திர வழக்கில் காங்கிரஸை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பதாகக் கூறிய அவர், மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஸ்விக்கி மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அதற்காக ₹187 தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியும், ஐஸ்கீரிம் வந்து சேரவில்லை. இது குறித்துப் புகார் தெரிவித்தும் அலட்சியமாக பதில் வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வழக்குச் செலவோடு ரூ.5,000-ஐ இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் நடந்த கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேஷ், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இளம் வயதிலேயே FIDE கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெறுமையை பெற்ற அவருக்கு, முதல்வர் ₹75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். முதல்வரைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக தினம் ஒரு கஞ்சா போதை குற்றச்சம்பவம் செய்திகளில் வெளியாகின்றன. பேருந்துகளை மறிப்பது, பெற்றோருடன் சண்டையிடுவது, சாலையில் செல்வோரை வெட்டுவது என தேவையற்ற குற்றங்களை கஞ்சா போதை செய்ய வைக்கிறது. போதையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தச் செய்திகளை படிப்பதில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
*பச்சை மிளகாயில் உள்ள காம்பை நீக்கி விட்டு அதை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள்களுக்குப் பிரெஷ்ஷாக இருக்கும். *பிரியாணி செய்யும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும். *லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் சேர்த்து பிடித்தால் சுவையாக இருக்கும். *மோர்க் குழம்பு செய்யும்போது தேய்க்காய்க்கு பதிலாகக் கசகசாவை தேர்த்து அரைத்தால் கெட்டியாக வரும்.
மூன்று ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகை பணிகளுக்காக UPSC நடத்திய தேர்வில் இந்தாண்டு தேர்வான 1,016 பேரில், தமிழக அளவில் 45 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம், ஐ.டி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் மோகமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.