news

News April 10, 2024

ஆச்சரியம் அளிக்கும் உச்சி பிள்ளையார் ஆலயம்

image

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உலகப்புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். இங்குள்ள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் 417 படிக்கட்டுகள் ஏறி கோயிலுக்கு செல்கின்றர். 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் தாயுமானவர் சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2024

வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை

image

பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். தொடர்ந்து, கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர், இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்பு அங்கிருந்து நீலகிரி செல்லும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

News April 10, 2024

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு

image

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாஜக வென்றால் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் வென்று விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும் எனவும் கூறினார்.

News April 10, 2024

தேர்தல் ஆணையருக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல்

image

CEC ராஜீவ் குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்புக்கு பதிலாக இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால் அவருக்கு 24 மணி நேரமும் சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.

News April 10, 2024

அதிமுகவின் ஆணி வேர் ஆர்.எம்.வீரப்பன்

image

அதிமுகவை தொடங்குவதற்கு ஆணி வேராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசியல் முடிவுகளை மிக சிறப்பாக எடுக்கக்கூடிய அவர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்க அவருக்கு பெரிதும் ஊக்கமளித்தார். மேலும், எம்ஜிஆரின் அன்பையும் ஆர்.எம்.வீ முழுமையாக பெற்றிருந்தார் எனக்கூறிய அவர், அதிமுகவுக்கும், திராவிட இயக்கத்துக்கும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத துயரம் என்றார்.

News April 10, 2024

திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு: இயக்குநர் ரவிகுமார் அறிவிப்பு

image

அயலான் பட இயக்குநர் ரவிகுமார், “திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கே எனது வாக்கு” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இதுபோன்று வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மற்றும் மதுரை சிபிஐஎம் வேட்பாளர்களான சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆதரவை அவர் அளித்துள்ளார்.

News April 10, 2024

சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை

image

திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து விசிக கட்சி விளக்கமளித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், அங்கு வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டிற்கு நேற்று இரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் உள்ளிட்ட எதையும் கைப்பற்றவில்லை என அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

News April 10, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தமிழ் கலாச்சாரத்தை பாஜக மதிக்கிறது – பிரதமர் மோடி
➤ காவிரியில் கர்நாடக அரசை அணை கட்ட விடமாட்டோம் – செல்வப்பெருந்தகை
➤ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது – முதல்வர் ஸ்டாலின்
➤ திமுக பொய் கூறி வெற்றி பெற பார்க்கிறது – இபிஎஸ்
➤ ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி
➤ பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி

News April 10, 2024

ஆர்.எம்.வீ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

image

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொது வாழ்விற்காகவும், எம்ஜிஆரின் கொள்கையை பிரபலப்படுத்தியதற்காகவும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார் எனத் தெரிவித்தார். மேலும், திரையுலகிலும், அரசியலிலும் சிறப்பாக பணியாற்றிய அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

பொறுமையாக இருந்து பெருமையாக வாழ்வோம்

image

எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். பில்கேட்ஸ் 30 வயதில் உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50ஆவது வயதில் தான் தொடங்கிய அமான்சியோ ஓர்டேகா, 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

error: Content is protected !!