news

News January 22, 2026

Sports 360°: அபிஷேக் சர்மா புதிய சாதனை

image

சர்வதேச டி20-ல் குறைவான பந்துகளில் 5,000 ரன்கள் (2,898 பந்துகள்) அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். Ex இங்கிலாந்து வீரர் நார்மன் கிஃபோர்ட்(85) உடல்நலக்குறைவால் காலமானார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான 2-வது டி20-ல் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி.

News January 22, 2026

Cinema 360°: ₹31.58 கோடி வசூலித்த ‘சிறை’

image

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ உலகளவில் ₹31.58 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மிருணாள் தாகூர் நடிக்கும் ‘DACOIT’ ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. போடி கே.ராஜ்குமார் இயக்கும் ‘சியான் 63’ படத்தின் கதை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்.

News January 22, 2026

தம்பதியரே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க…

image

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.

News January 22, 2026

ராசி பலன்கள் (22.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

ராமதாஸ் பெறாத பிள்ளை திருமா: பாமக MLA அருள்

image

திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்கலாம் என பாமக MLA அருள் சூசகமாக கூறியுள்ளார். ராமதாஸ் மீது எந்த வழக்கும் இல்லை, யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய அவர், தைலாபுரம் இல்லத்தில் விரைவில் கூட்டணிக்கான கையெழுத்து போடப்படும் என்றார். ராமதாஸ் பெறாத பிள்ளைதான் திருமாவளவன்; அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் டிடிவி, NDA கூட்டணியில் இணைந்தது எனவும் தெரிவித்தார்.

News January 21, 2026

அதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்த 5 கட்சிகள்

image

NDA-வில் ஐஜேகே தொடருவதாகவும், தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். அதேபோல், வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் பாலை பட்டாபிராமன், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை கட்சி நிறுவனர் சிற்றரசு, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் முருகன்ஜீ, தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் EPS-ஐ சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

News January 21, 2026

அமமுகவுக்கு 8 தொகுதிகளா? முற்றுப்புள்ளி வைத்த TTV

image

NDA கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கூட்டணியில் மட்டுமே இணைந்துள்ளோம்; தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று TTV விளக்கமளித்துள்ளார். தொகுதிப்பங்கீடு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை, உண்மைக்கு புறம்பான செய்திகளை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 21, 2026

கூட்டணி அமைப்பதில் கோட்டை விடுகிறதா தவெக?

image

இண்டியா கூட்டணியில் DMK + INC + VCK + LEFT + MDMK + MNM + IUML கட்சிகளும், NDA கூட்டணியில் BJP + AIADMK + PMK + AMMK + TMC+ IJK + TMMK கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அரசியலில் கூட்டணி முக்கியமானவை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியும், இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்கவில்லை. தேமுதிக, உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில், TVK தனித்துவிடப்பட்டுள்ளதா?

News January 21, 2026

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் மீண்டும் உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காலை வேளையில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!

News January 21, 2026

பிரபல டிவி சேனலை வாங்குகிறாரா விஜய்?

image

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களுக்கு சாதகமாக செயல்பட டிவி சேனல் ஒன்றை தொடங்க தவெக முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக சேனல் தொடங்க உரிமம் வாங்குவது உள்ளிட்ட பல சவால்கள் இருப்பதால், ஏற்கெனவே செயல்படும் முன்னணி செய்தி சேனலை வாங்கும் நடவடிக்கையில் விஜய் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்நிறுவனம் அதிகப்படியான தொகை கேட்பதால் வாங்குவதில் இழுபறி நீடிக்கிறதாம்.

error: Content is protected !!