India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைனின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மின்சாரம் அளித்து வந்த டிரிபில்ஸ்கா மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்த்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய லக்னோ 167/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆயுஷ் பதோனி 55 ரன்கள் எடுத்தார். 168 ரன்களை இலக்காக கொண்டு ஆட துவங்கிய டெல்லி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின், மெக்ருக் 55, ரிஷப் பண்ட் 41 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியது.
மே 1ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பயணம் ஆகிறார். ரிஷபம் என்பது குருவின் பகை வீடு. ஆனால், குருவின் விசேஷ பார்வைகள் கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசியினரின் மீது படுகின்றது. இதனால், அந்த மூன்று ராசியினருக்கு நற்பலன்கள் நடைபெற காத்திருக்கிறது. அவர்களின் வாழ்வில் அடுத்த சில மாதங்களுக்கு நிம்மதி வந்து குடியேறப் போகின்றது. வாழ்வில் சுகம் வாய்க்கும்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் G.O.A.T. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் #TheGreatestOfAllTime என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவதாக மோடி மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் பிரசாரம் செய்த அவர், மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா? என மக்கள் கேட்பதாக கூறினார். ஏன் ஒரு மொழிக்காகவே எப்போதும் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, அதன் வாட்ஸ்அப், Messenger மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் AI Chatbot வசதியை சோதனை செய்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்கள் மூலம் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வசதி செயல்பட்டிற்கு வரும் நிலையில், பிழை திருத்துதல், எடிட்டிங், மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையில் AI Chatbot பயனாளர்களுக்கு உதவும்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி ஒரு சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி – அர்ஷத் கான் ஜோடி 73* ரன்கள் குவித்தனர். இது ஐபிஎல்லில் 8ஆவது விக்கெட்டுக்கு எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். ரஷித் கான் – அல்சாரி ஜோசப் ஜோடி 88* ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, சிறந்த ஊழியர்கள் 12 – 15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், மற்ற ஊழியர்களுக்கு 4.5 – 7% வரை சம்பள உயர்வு இருக்கும். 4ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,434 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் அண்ணாமலை வெற்றி பெற பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யுமென கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் பாமகவுக்கு வேட்புமனு, தேர்தல் அலுவலகம் திறப்பிற்கு அழைப்பில்லை என்பதால் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் நிர்வாகி ராஜ் அறிவித்திருந்தார். கூட்டணி தர்மத்தை விட சுயமரியாதை முக்கியம் என ராஜ் கூறிய நிலையில், ஒரே நாளில் ‘அந்தர்பல்டி’ அடித்துள்ளார்.
நாட்டு மக்களை இந்து, முஸ்லிம் என மதத்தின் பெயரால் பிரிப்பது மட்டுமே மோடியின் மனதில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என்ற பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தானா என்றார். அவர்களே முஸ்லிம் லீக் உடன் இருந்தவர்கள்தான். வரலாறை மோடி படிக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.