news

News April 13, 2024

பாஜக ஆட்சி யாருக்கானது?

image

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் 70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், 22 தொழிலதிபர்களிடம் இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் பாஜக. இந்தியாவை பணக்காரர்களுக்கான நாடாக மாற்ற பாஜக தயாராகி வருவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த தேர்தலில் மக்கள் இதற்கு சரியான தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

News April 13, 2024

அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக புதிய வரலாறு படைக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று குற்றம்சாட்டிய அவர், அவர்கள் இருவரும் தோற்கடிக்கப்பட வேண்டிய சக்திகள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு பாஜக தேவை என தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். வரும் தேர்தலில் அது நிச்சயம் வாக்குகளாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 13, 2024

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதை பின்பற்றலாம்

image

மன அழுத்தம், அதிக வேலை போன்றவை தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கின்றன. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வரும். உண்மையில் அது வரம். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்கும் பழக்கத்தை முயற்சிக்க வேண்டும். மேலும், இரவு உணவில் கூடுதல் கவனம் செலுத்தி திடமான, காரமான உணவுகளை தவிர்க்கலாம். தூங்குவதற்கு முன்னர் சூடான அல்லது மிதமான தண்ணீரில் குளியல் போடலாம்.

News April 13, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ஒரே மேடையில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் பரப்புரை
➤ எனது மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி
➤ கவிதாவுக்கு ஏப்ரல் 15 வரை சிபிஐ காவல்
➤ விரைவில் அண்ணாமலை ஆடு மேய்க்க செல்வார் – ராஜன் செல்லப்பா
➤ மதுரையில் அமித்ஷா பரப்புரை
➤ நடிகர் அருள்மணி காலமானார்
➤ ஓய்வு பற்றி யோசிக்கவில்லை – ரோஹித்

News April 13, 2024

புரோட்டீன் பவுடர் உடலுக்கு நல்லதா?

image

ஜிம் செல்லும் இளைஞர்கள் புரோட்டீன் பவுடர் உட்கொள்வது சாதாரணமாகிவிட்டது. இந்திய சந்தையில் சுமார் ரூ.33,028 கோடிக்கு புரோட்டீன் பவுடர் விற்பனையாகிறது. இந்நிலையில், புரோட்டீன் பவுடர் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. குடலில் உள்ள பாக்டீரியாவை வளரச் செய்து அதீத வயிற்று வலியை ஏற்படுத்தலாம். புரோட்டீன் பவுடர் தொடர்பாக 40,000 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 13, 2024

VIRAL: ஒரே இடத்தில் மூன்று ஸ்டார்கள்

image

ஐபிஎல்லில் சென்னை – மும்பை ரசிகர்கள் எதிரும் புதிருமாக இருந்தாலும், இரு அணி வீரர்களும் நட்பு பாராட்டி வருகின்றனர். சிஎஸ்கே அணி அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில் மும்பை அணியுடனான போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் மும்பை சென்றுள்ள நிலையில், அங்கு சச்சின், தோனி, ரோஹித் மூவரும் சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

News April 13, 2024

அதிமுக சிம்பிளி வேஸ்ட்: முதல்வர் ஸ்டாலின்

image

வேண்டாம் மோடி என்ற குரல் தெற்கில் இருந்து இந்தியா முழுவதும் கேட்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் பிரசாரம் செய்த அவர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அமைதியும், தொழில் வளர்ச்சியும் போய்விடும் என்றார். 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகள் குறித்து மோடி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக குறித்து சொல்ல ஒன்றும் இல்லை ‘Simply Waste’ எனத் தெரிவித்தார்.

News April 12, 2024

மின் உற்பத்தி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்

image

உக்ரைனின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மின்சாரம் அளித்து வந்த டிரிபில்ஸ்கா மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்த்துள்ளது.

News April 12, 2024

ஐபிஎல் : டெல்லி அணி வெற்றி

image

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய லக்னோ 167/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆயுஷ் பதோனி 55 ரன்கள் எடுத்தார். 168 ரன்களை இலக்காக கொண்டு ஆட துவங்கிய டெல்லி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின், மெக்ருக் 55, ரிஷப் பண்ட் 41 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியது.

error: Content is protected !!