India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இம்மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் அதிகாரி சாகு அறிவித்துள்ளார். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் 15ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வருவது உறுதி.
நீலகிரியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் போன்று தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியை பற்றி பேச, திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது என விமர்சித்த அவர், சுத்தமான அரசியலை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.
‘ஜெமினி’ படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து, நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. இன்னும் சில தினங்களில் சுவாரஸ்யமான அப்டேட்டுகள் வரவுள்ளன. மறக்காம ஓ போடு” என சஸ்பென்ஸ் உடன் குறிப்பிட்டுள்ளார். இதனால் அது தங்கலான் அப்டேட்டா? துருவ நட்சத்திரம் அப்டேட்டா? ஜெமினி 2ஆம் பாகம் வருகிறதா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
தோல்வி பயத்தில் கோவையில் வெளிமாநில ஆட்களை ஊடுருவ செய்து பாஜக கலவரத்தை உருவாக்கலாம் என்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கோவை அமைதியை விரும்பும் நகரம். இங்கே பாஜகவின் ரௌடிஸ அரசியல் எடுபடாது. ஆளுங்கட்சியாக நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறோம். பாஜக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சாதகமான நிலையை ஏற்படுத்த முயல்கிறது” என்றார்.
பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்ததில், இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மோடியை சிறைக்கு அனுப்புவோம் என கூறவில்லை என லாலு பிரசாத் மகளும் எம்பியுமான மிஸா பார்தி பல்டி அடித்துள்ளார். கடந்த 11ஆம் தேதி பேசிய மிஸா பார்தி, தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியடைந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால், மோடி சிறைக்கு அனுப்பப்படுவார் என கூறியிருந்தார். ஆனால் தாம் அப்படி சொல்லவில்லை, ஊழல் செய்தோர்தான், சிறைக்கு அனுப்பப்படுவர் என கூறியதாக தற்போது மறுத்துள்ளார்.
அயோத்தி கோயிலை பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்தாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உதம்பூர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ராமர் கோயிலை பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்தும் என காங்கிரஸ் தெரிவித்து வருவதாகவும், ஆனால் அதுபோல பாஜக செய்யாது என்றும் கூறினார். ஏனெனில், பாஜக தொடங்கப்படும் முன்னரே, ராமர் கோயில் விவகாரத்துக்கான போராட்டம் தொடங்கி விட்டதாக மோடி தெரிவித்தார்.
சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமமாக இருந்தது என நடிகை மிருணாள் தாகூர் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஒரு படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இதயம் உடைவது போல் இருப்பது தான். ஒரு கதாபாத்திரம் நமக்கு பிடித்துவிட்டால், நாம் அதுபோலவே மாறிவிடுகிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் சீதா மகாலட்சுமி” எனத் தெரிவித்தார்.
ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், மேக்ஸ்வெல்லுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவருக்கு, அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படவுள்ளது. SRH-RCB இடையேயான 30ஆவது ஐபிஎல் போட்டி, வரும் ஏப்.15ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாகக் கூறிய முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. திமுக இதுவரை ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது; டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடையும் என்று விமர்சித்துள்ள பாஜக, தமிழக வளர்ச்சிக்கு மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பே காரணம் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.