India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அங்குள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 29 கம்பார்ட்மெண்ட்களிலும் கூட்டம் நிரம்பி, அரை கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு சுமார் 18 மணி நேரம் ஆனது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வந்ததே காரணமாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள PVR-INOX திரையரங்குகளில், மலையாள படங்களை வெளியிடப்போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மலையாள சினிமாவுக்கு, பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நேற்று, ‘ஆவேஷம்’ உள்ளிட்ட 3 முக்கிய படங்கள் வெளியாகியுள்ளது.
ரஷித் கானைப் போன்ற வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் என GT அணியின் கேப்டன் சுப்மன் கில் மனம் திறந்து பாராட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “RR அணிக்கு எதிரான லீக் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ய விரும்பினேன். ஆனால், அதற்குள் அவுட் ஆகி விட்டேன். ரஷித்தும், திவாட்டியாவும் சிறப்பாக ஆடினர். கடைசி பந்தில் ஆட்டத்தை வெல்வது ஒரு அற்புதமான உணர்வு” எனக் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிவராமன், “பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின் போக்கு முழுக்க திமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது. இது குறித்து கேட்டதற்கு அதிமுக தங்களை உதாசீனப்படுத்தியது” என குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கும், இபிஎஸ்ஸுக்கும் தொலைநோக்கு சிந்தனை உள்ளதா?, இரு கட்சிகளுக்கும் திட்டமிடுதல் என்பதே கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவர் செய்த சாதனைகளை கூறும் அரசியலாக இருக்க வேண்டும். எனவே, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7%ஆக இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி முன்பு கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த விகிதத்தை 7%ஆக தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி 7.2%ஆக இருக்குமென்றும் அந்த வங்கி கணித்துள்ளது.
பெங்களூரு அணியில் பும்ரா இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார். மும்பைக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய அவர், “பும்ரா சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினார். நாங்கள் 250 ரன்கள் வரை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் முடியாமல் போனது” என்றார். நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் 5 முக்கிய விக்கெட்டுக்களை பும்ரா கைப்பற்றினார்.
3-ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்., 19இல் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 2ஆம் கட்ட தேர்தல் ஏப்., 26இல் 94 தொகுதிகளில் நடைபெறுகிறது. 3ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு இன்று தொடங்கும் நிலையில், மே 7இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப் 19, ஏப் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
பிரசாரத்தில் பாஜக மீது கடும் குற்றச்சாட்டு வைக்காதது ஏன் என அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பாஜக மீது கடும் குற்றச்சாட்டு வைப்பதில்லை என கூறப்படுவது உண்மையில்லை என்றும், தேவைப்படும் இடத்தில் பாஜகவை விமர்சிப்பதாகவும் தெரிவித்தார். திமுக போல தனிப்பட்ட குற்றச்சாட்டை அதிமுக யார் மீதும் வைப்பதில்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
மறைந்த நடிகர் அருள்மணி, அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆவார். ஜெ., மீது இருந்த ஈர்ப்பால் அதிமுகவில் இணைந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சியினரை தனது பேச்சுத்திறனால் கடுமையாக தாக்கினாலும், அனைவருடனும் நட்புடன் பழகக்கூடியவர். தற்போது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வாக்குச்சேகரித்து வந்த நிலையில், அவரின் மரணம் அதிமுகவினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.