India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ராகுலுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை மற்றும் கோவையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல், I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 19 வயதான இந்தியாவின் இளம் வீரர் உதித் (57 கிலோ) வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றில் உதித், ஜப்பானின் கென்டோ யுமியாயுடன் மோதினார். இதில் 4-5 என்ற கணக்கில் அவர் போராடித் தோற்றார். இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் 2ஆம் இடம் பிடித்த உதித் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
நாளை முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 10 ரூபாய்க்கு லைட்டர் கிடைப்பதால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் 10 நாள்கள் வேலை நிறுத்தம் செய்து அரசுக்கு கண்டனத்தை அவர்கள் பதிவு செய்யவுள்ளனர். சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன.
வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 18 வயதான அனைவரும் வாக்களிக்க முடியும். ஆதலால் தேர்தல் ஆணைய இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு, தங்களது பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம். செல் எண், பிறந்த தேதியை உள்ளிட்டும் அறிந்து கொள்ள முடியும். பெயர் இருப்பது உறுதியானால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 1984ம் ஆண்டில் இந்திராவை அவரது 2 பாதுகாவலர்கள் சுட்டுக் கொலை செய்தனர். அதில் ஒருவரான பேயந்த் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் கால்சா, ஃபரீத்கோட் தொகுதியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அத்தொகுதி மக்களில் பலர் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம், வரும் மே 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை, நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இதில், அனுராக் காஷ்யப், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இது விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படம் ஆகும்.
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி அதற்காக தயாராகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், விராட் கோலி (ஆரஞ்சு கேப்), பும்ரா (பர்பிள் கேப்), சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளதால், யாரெல்லாம் அணியில் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இம்மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் அதிகாரி சாகு அறிவித்துள்ளார். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் 15ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வருவது உறுதி.
நீலகிரியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் போன்று தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியை பற்றி பேச, திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது என விமர்சித்த அவர், சுத்தமான அரசியலை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.
‘ஜெமினி’ படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து, நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. இன்னும் சில தினங்களில் சுவாரஸ்யமான அப்டேட்டுகள் வரவுள்ளன. மறக்காம ஓ போடு” என சஸ்பென்ஸ் உடன் குறிப்பிட்டுள்ளார். இதனால் அது தங்கலான் அப்டேட்டா? துருவ நட்சத்திரம் அப்டேட்டா? ஜெமினி 2ஆம் பாகம் வருகிறதா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.