news

News May 1, 2024

வாழ்வை செம்மையாக்கும் வல்லக்கோட்டை முருகன்

image

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்றதுமே ஒருவித பதற்றத்துக்கு ஆளாகிவிடுகிறோம். ஏனென்றால், கல்யாணத் தடைக்குக் காரணமாகிவிடுகிறது இந்த தோஷம். செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர், முருகனுக்கு விரதமிருந்து, வல்லக்கோட்டை சுப்பிரமணியன் கோயிலுக்கு சென்று விருட்சிப்பூ சாற்றி, ஆறுமுக விளக்கேற்றி, தேன் கலந்த தினைமாவு படைத்து வணங்கினால் அத்தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்வு செம்மையுறும் என்பது ஐதீகம்.

News May 1, 2024

490 காலிப் பணியிடங்கள். இன்றே கடைசி நாள்

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதில், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி உள்ளிட்ட 490 இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் (இன்ஜினியரிங் படித்தவர்கள்) <>www.aai.aero<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ₹40,000 முதல் ₹1,40,000 சம்பளம் வழங்கப்படவுள்ளது.

News May 1, 2024

வருகைப் பதிவு செய்தால் மட்டும் போதும்

image

வரும் ஜூன் மாதம் முதல் எமிஸ் (EMIS) இணையதளத்தில் வருகைப் பதிவைத் தவிர, ஆசிரியர்கள் வேறு எந்த பதிவும் செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணியைப் பாதிக்கும் எந்தவித பதிவேற்றப் பணிகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை எனவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர் மதிப்பீடு, தேர்வு உள்ளிட்ட இணையவழிப் பதிவேற்றங்களை மேற்கொள்ள 14,000 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News May 1, 2024

IPL: சென்னை- பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

image

CSK-PBKS இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. SRH-க்கு எதிரான முந்தைய போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற CSK அணி, புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது. பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல 7 அணிகள் போராடி வருவதால், இனி வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும். பஞ்சாப் உடனான இன்றைய போட்டியில் CSK அணி வெற்றி பெறுமா?

News May 1, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி
▶வெயில் சுட்டெரிப்பதற்கு வானில் மேகக் கூட்டங்கள் இல்லாததே காரணம்: ரமணன்
▶பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுகளால் பாஜக தோற்கும்: செல்வப்பெருந்தகை
▶தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா
▶தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
▶IPL: மும்பை அணி தோல்வி

News May 1, 2024

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குறித்து தீவிர கண்காணிப்பு

image

இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் பருவகால காய்ச்சலை, பல்வேறு மாநிலங்களில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவும் வைரஸ் காய்ச்சல் என்றும், இதற்கான வழிகாட்டுதல்கள், நோயாளிகளின் வகைப்பாடு, சிகிச்சை நெறிமுறை போன்றவை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

தேர்தல் ஆணையம் மக்களை தண்டிக்கிறது

image

மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையம் தளர்வு அளித்திருக்கலாம் எனவும், ஆனால், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

கருமுட்டையை உறைய வைத்த தனுஷ் பட நடிகை

image

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார். ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர், இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2 வருடங்களாக இதைச் செய்வதற்கு தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொண்டதாகவும், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க எல்லாப் பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News May 1, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 1, சித்திரை – 18 ▶கிழமை – புதன்
▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM
▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM
▶குளிகை நேரம்: 10:30 AM – 12:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: அஷ்டமி
▶நட்சத்திரம்: 3:11 AM வரை திருவோணம் பிறகு அவிட்டம்

News May 1, 2024

பிறந்தநாளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித்

image

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். தனது பிறந்தநாளான நேற்று, சதம் அல்லது அரைசதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், 4(5) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதுவரை ரோஹித் ஷர்மா பிறந்தநாளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், 2014- 1(5), 2022- 2(5), 2024- 3(5), 2024- 4(5) ரன்களில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!