news

News May 1, 2024

துபே தாக்கத்தை ஏற்படுத்துவார்: ப்ளெமிங்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் ஷிவம் துபே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று CSK அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷிவம் துபே குறித்து பேசிய அவர், எதிரணியின் ஆட்டத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதில், துபே முழுமையான வீரராக திகழ்கிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்” எனக் கூறினார்.

News May 1, 2024

அஜித்குமார் எடுத்த அதிரடி முடிவுகள்

image

*சில விளம்பரங்களில் நடித்த அஜித், பின்னாளில் விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்தார். *தனது பெயரை அரசியல் காரணங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார். *அஜித் ரசிகர் மன்றத்தை அதிரடியாகக் கலைத்தார். *அல்டிமேட் ஸ்டார், தல ஆகிய பட்டங்களைத் துறந்தார். *சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து புது ட்ரெண்ட் உருவாக்கினார். *தனது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளைத் தவித்தார்.

News May 1, 2024

குருபெயர்ச்சி: இந்த ராசிக்கார்களுக்கு நல்ல நேரம்

image

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சியை அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், குருவின் பார்வை பட்டாலே கஷ்டங்கள் பறந்துவிடும் என்பார்கள். இன்று மாலை 5.19 மணிக்கு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார். இதனால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 6 ராசிகளும் நல்ல பலன் பெற உள்ளனர். மற்ற ராசியினர் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

News May 1, 2024

அங்கீகாரத்தை பாஜக தலைமை வழங்கும்!

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடக் கேட்டபோது, தான் மறுத்துவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி விளக்கமளித்துள்ளார். ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர், “குமரி எம்.பி., தொகுதியில், பாஜக மூத்த தலைவர் பொன்னார் போட்டியிட விரும்பும்போது, அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில், தேர்தலுக்குப் பின் எனக்குரிய அங்கீகாரத்தை பாஜக வழங்குமென நம்பிக்கை உள்ளது”எனத் தெரிவித்தார்.

News May 1, 2024

‘RRR’ படத்தை குறிப்பிட்டு காங்கிரசை விமர்சித்த பிரதமர்

image

‘RRR’ படத்தைக் குறிப்பிட்டு பேசிய மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ‘RR’ என மறைமுகமாக தாக்கினார். ஜஹீராபாத்தில் பிரசாரம் செய்த அவர், ‘RRR’ படம் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்ததாகவும், ஆனால், ‘RR’ வசூலிக்கும் வரி இந்தியாவை இழிவுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரசும், பிஆர்எஸும் ஊழல் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என விமர்சித்த அவர், மதுபான வழக்கில் அது உறுதியானதாகக் கூறினார்.

News May 1, 2024

IPL: முஸ்தஃபிசூருக்கு இது தான் கடைசி போட்டி

image

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, CSK வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கப்பதற்காக, முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், 14 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், அணியில் இருந்து விலகுவது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

News May 1, 2024

Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

தென்கிழக்கு மத்திய ரயில்வே நிரப்பவுள்ள 1,110 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் Trade Apprentice பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி: 10, +2, ITI. வயது வரம்பு: 15-24. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: நிபந்தனைகளின்படி ஊதியம். கூடுதல் தகவல்களுக்கு <>SECR<<>> என்ற இணைய முகவரிக்கு சென்று பார்க்கவும்.

News May 1, 2024

உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிஸ் திட்டம்!

image

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக் கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுவரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய அதிபர் புடின் விமர்சித்துள்ளார். உலக அமைதிக்கான சுவிஸின் முன் முயற்சி வெற்றிபெற வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

News May 1, 2024

‘இந்தியன் 2’ இசை வெளியீட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

image

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், கமல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், ராம் சரண் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்பட சிலர் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது

image

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் சிலிண்டர் விலை ₹19 குறைந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் ₹1,930ஆக இருந்த நிலையில் இன்று முதல் ₹19 குறைக்கப்பட்டு ₹1911க்கு விற்பனையாகிறது. இந்த விலைகுறைப்பின் மூலம் சாலையோர, நடுத்தர, டீக்கடைக்காரர்கள், ஹோட்டல் கடைக்காரர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

error: Content is protected !!