India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மே – 1, சித்திரை – 18 ▶கிழமை – புதன்
▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM
▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM
▶குளிகை நேரம்: 10:30 AM – 12:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: அஷ்டமி
▶நட்சத்திரம்: 3:11 AM வரை திருவோணம் பிறகு அவிட்டம்
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். தனது பிறந்தநாளான நேற்று, சதம் அல்லது அரைசதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், 4(5) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதுவரை ரோஹித் ஷர்மா பிறந்தநாளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், 2014- 1(5), 2022- 2(5), 2024- 3(5), 2024- 4(5) ரன்களில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரி மூலம் தண்ணீா் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீா் இல்லாமல் 90% மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடைக் காலத்தில், விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளார்.
▶பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. ▶மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. ▶முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். ▶நமக்கு வேண்டியதெல்லாம் கோவில் அல்ல, பள்ளிக்கூடம் தான். ▶உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது. ▶சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும். ▶உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்தனின் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படம், ஆக.15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்.27ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை, ஆப்கானிஸ்தான் அணி வெளியிட்டுள்ளது. அதில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது இஷாக், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், நவீன் அஹ்மத், நவீன்- ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்திற்கு என்று புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. <
▶1328 – ஸ்காட்லாந்தை தனி நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ▶1776 – இல்லுமினாட்டி குழுமம் தொடங்கப்பட்டது. ▶1834 – பிரிட்டன் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின. ▶1840 – உலகின் முதலாவது ஒட்டக்கூடிய தபால்தலை வெளியிடப்பட்டது. ▶1844 – ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது. ▶1865 – பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
55% வாரிசு சொத்துரிமை வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொள்கை முடக்கத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பொய் வாக்குறுதிகள், வாக்கு வங்கி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் ஆகியவை தான் காங்கிரஸின் அடையாளங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் நாசர் பெயரில் போலி பேஸ்புக், X தளப் பக்கங்களை தொடங்கி, மோசடி செய்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இதுதொடர்பான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் பார்வையில் நடிகர் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த மர்ம நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.