news

News April 29, 2024

சற்றுநேரத்தில் தண்டனை விவரம்

image

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் சற்றுநேரத்தில் வெளியாகிறது. இவ்வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இருவரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News April 29, 2024

தலைநகரை கொலைநகராக மாற்றி விடாதீர்கள் : தினகரன்

image

சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையை சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், தமிழக முதல்வர் அதனை பொதுநலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அவர், அப்போது தான் தலைநகராக இருக்கும் சென்னை, கொலை நகராக மாறாமல் இருக்கும் என்றார். சென்னையில் கடந்த சில நாள்களாக, அடுத்தடுத்து கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2024

இந்தூரிலும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?

image

ம.பியில் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கன்டி, தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். அங்கு, வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், வேட்பு மனுவை அவர் திரும்பப் பெற்றுள்ளார். ஏற்கெனவே, குஜராத் மாநிலம் சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். தற்போது, இந்தூர் தொகுதியிலும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது.

News April 29, 2024

6ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

image

57 தொகுதிகளில் நடைபெற உள்ள 6ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. பிஹார் (8), ஹரியாணா (10), ஜார்கண்ட் (4), ஒடிஸா (6), உ.பி (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 2 கட்ட தேர்தலில், 189 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வரும் மே 7ஆம் தேதி, 3ஆம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

News April 29, 2024

உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

image

நாடு முழுவதும் முக்கிய ஊழல் முறைகேடுகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத் துறைக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்பேரில், நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News April 29, 2024

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு

image

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நிர்மலா உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்துள்ளது. தொடர்ந்து தண்டனை விவரங்களை நாளை வழங்க நிர்மலா தரப்பில் கோரப்பட்டுள்ளது.

News April 29, 2024

நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை

image

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில், கடந்த
2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள் உட்பட 120 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.

News April 29, 2024

அனுராக் தாக்கூருக்கு எதிராக புகாரளித்த CPM

image

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை CPM தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்த புகாரில், “ராஜஸ்தானில், தேர்தல் விதிகளை மீறி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் தாக்கூர்
பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை இழப்பர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 29, 2024

தொடர் வேட்பாளர் மாற்றத்தால் கலக்கத்தில் நிர்வாகிகள்

image

உ.பி-யில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறார்கள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில், சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தற்போது வரை, 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில், முதலில் வேட்பாளராக தேஜ் பிரதாப் என்பவர் அறிவிக்கப்பட்டு,பிறகு அவர் மாற்றப்பட்டார்.

News April 29, 2024

வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை

image

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் டாப்சி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை எனத் தெரிவித்துள்ளார். தன்னைத் தானே உத்வேகப்படுத்தி கடுமையாக உழைத்ததால் வாழ்க்கையில் முன்னேறியதாகக் கூறிய அவர், தற்போது இருக்கும் இடத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!