news

News April 29, 2024

தொடர் வேட்பாளர் மாற்றத்தால் கலக்கத்தில் நிர்வாகிகள்

image

உ.பி-யில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறார்கள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில், சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தற்போது வரை, 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில், முதலில் வேட்பாளராக தேஜ் பிரதாப் என்பவர் அறிவிக்கப்பட்டு,பிறகு அவர் மாற்றப்பட்டார்.

News April 29, 2024

வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை

image

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் டாப்சி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை எனத் தெரிவித்துள்ளார். தன்னைத் தானே உத்வேகப்படுத்தி கடுமையாக உழைத்ததால் வாழ்க்கையில் முன்னேறியதாகக் கூறிய அவர், தற்போது இருக்கும் இடத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2024

முத்தரசனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது

image

2024ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருதும், திராவிட கழக பிரசாரச் செயலாளர் அருள்மொழிக்கு ‘பெரியார் ஒளி’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘அயோத்திதாசர் ஆதவன்’, ‘காயிதேமில்லத் பிறை’, ‘செம்மொழி ஞாயிறு’ உள்ளிட்ட விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

News April 29, 2024

தமிழகத்திலிருந்து அதிக முறை எம்பியானவர்களின் பட்டியல்

image

தமிழகத்தில் இருந்து அதிக முறை மக்களவைக்கு தேர்வானவர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் முதலிடத்தில் உள்ளார். இவர், சிவகங்கை தொகுதியில் இருந்து 7 முறை தேர்வாகியுள்ளார். அதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அருணாச்சலம், வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் திமுகவை சேர்ந்த பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலு தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். டி.ஆர்.பாலு இம்முறை வென்றால், முதலிடத்தை ப.சிதம்பரத்துடன் பகிர்ந்துகொள்வார்.

News April 29, 2024

ஸ்டாலின் ஒரு வருடம் பிரதமராக இருப்பார்: அமித் ஷா

image

I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறிய அவர், அவ்வாறு நடந்தால் மம்தா பானர்ஜி, சரத் பவார், ராகுல் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள் என்று சாடினர். ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

News April 29, 2024

முகலாய மன்னர்கள் செய்த அட்டூழியங்களைப் பேசுவாரா?

image

இந்தியப் பேரரசர்களை அவமானப்படுத்தும் ராகுல் காந்தி, முகலாய மன்னர்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து பேச மறுப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார். பெலகாவி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த முகலாய பேரரசர் அவுரங்கசீப் செய்த மோசமான செயல்களை காங்கிரஸ் மறந்து விட்டது. வாக்கு வங்கியை தக்கவைக்க காங்., இளவரசர் தாஜா செய்கிறார்” எனக் கூறினார்.

News April 29, 2024

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 : வங்கதேச அணி அறிவிப்பு

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல் ஹசன் அணியில் இடம்பிடிக்காத நிலையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியை வழி நடத்துகிறார். மேலும், இந்த அணியில் லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன் தமிம், மஹ்முதுல்லா, தஸ்கின் அஹ்மத் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவ்விரு அணிகளுக்கான முதல் போட்டி, மே 3ஆம் தேதி தொடங்குகிறது.

News April 29, 2024

அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி

image

திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா சந்திக்கச் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதற்கு முன்னதாக, கெஜ்ரிவாலை அவரது மனைவி சந்திக்கச் சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், அனுமதி கிடைத்துள்ளதால் டெல்லி அமைச்சர் அதிஷி மற்றும் சுனிதா ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கவுள்ளனர்.

News April 29, 2024

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

கொடநாடு வழக்கு; விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவை ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையை, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு கேட்டிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்க சிபிசிஐடி அவகாசம் கோரியிருந்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

error: Content is protected !!