India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தனது இலட்சியம் எனத் தமிழகப் பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணன் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்தார். அவர் ஒலிம்பிக்குக்குச் செல்வது இரண்டாவது முறையாகும். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்றார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க, மதச்சார்பற்ற ஜனதா தளம் MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்களுடன் பிரிஜ்வல் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, ரேவண்ணா மீதும் அவரது வீட்டில் சமையல் வேலை பார்த்த பெண், பாலியல் புகார் அளித்துள்ளார்.
தென் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 1 வரை நெல்லை, குமரி மாவட்டங்களிலும், மே 2ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யலாம். இதேபோல, மே 3-5 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போலி வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், மே 1ஆம் தேதிக்குள் உரிய விளக்கமளிக்க அவருக்கு போலீசார் கெடு விதித்துள்ளனர். எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் என அமித் ஷா பேசுவது போன்ற போலி வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் பரப்புவதாக பாஜக புகார் கூறியிருந்தது.
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா” என நிர்மலா தேவி பேசியதால், அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர், விளக்கத்தை அளித்ததோடு, விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க உத்தரவிட்டார்.
மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது. இவ்வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் உரிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா தேவி தரப்பில் நாளையும் வாதாட அவகாசம் கேட்கப்பட்டதால், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நிதியுதவி வழங்கிய நெப்போலியனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிடப் பணிகளை முடிக்க ரூ.40 கோடி தேவைப்படுவதாக நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அமைச்சர் உதயநிதி, கமல், விஜய் ஆகியோர் தலா ரூ.1 கோடியும், சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சமும் ஏற்கெனவே நிதியுதவி அளித்திருந்தனர்.
நவாபூரில் உள்ள இந்த ரயில் நிலையம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. 2 மாநிலத்திலும் ஒரு பாதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை வேறுபடுத்துவது என்னவெனில், டிக்கெட் கவுண்டர் அலுவலகம் மகாராஷ்டிராவிலும், அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் குஜராத்திலும் அமைந்துள்ளது. இங்கு, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் அறிவிப்பு செய்யப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் சி.ஏ தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கக் கூடாது என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “4,46,000க்கும் மேற்பட்ட சி.ஏ., மாணவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதியாக உள்ளனர். எனவே, கல்வி & ஜனநாயக நலன்களை சமநிலைப்படுத்த மே 2ஆம் தேதி தொடங்கும் சி.ஏ. தேர்வுகளைத் ஒத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த பின், மதம், மொழி, இனம் அடிப்படையில் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்பது பி.ஆர் சட்ட விதியாகும். அதனை மீறியதால்தான், 1999இல் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே 6 ஆண்டுகள் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இப்போது பாஜகவினர் முஸ்லீம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களைப் பேசிவரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
Sorry, no posts matched your criteria.