India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெளிவான தமிழில் ரிங்காரக் குரல் இனிமையால், நம்மை உணர்வின் ஆழத்திற்கு அழைத்து செல்லும் இசைக்குயில் ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் இன்று. வாலியில் தொடங்கி யுகபாரதி வரையிலான மூன்று தலைமுறை தமிழ்க் கவிஞர்களின் தமிழுக்கும், குரலால் இலக்கணம் சேர்த்தார். வண்ணமயமான ஆடைகள் அணிந்து, ஒப்பனையாக தோன்றினாலும் தனிமையிலும், மௌனத்திலும் உழன்று குரலை உருக்கி கொடுத்த அவரை இசையுலகம் என்றும் மறவாது!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 320 நாட்கள் சிறையில் இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பிலும், எம்எல்ஏவாக இருப்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பிலும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி திருமணம் செய்யவுள்ளார். சிகோலாய் சச்தேவ்வுக்கு திருமணமாகி, 15 வயதில் மகள் இருப்பதால் சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு பதில் அளித்துள்ள வரலட்சுமி, எதிர்மறையான கருத்துகளை பற்றி கவலையில்லை என்றார். தன் பார்வைக்கு நிகோலாய் அழகானவர் எனவும், தனது தந்தையும் 2ஆவது திருமணம் செய்தவர்தான் எனவும், அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்.எல்.ஏ. பதவியில் தொடர்வதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டது ED.
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 3 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, வெப்ப அலை வீசி வரும் நிலையில், மே 1 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு கடும் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட், ஆந்திரா, கர்நாடகாவுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை குறியீட்டெண் சென்செக்ஸ் (காலை 10.30 நிலவரப்படி) 531 புள்ளிகள் உயர்ந்து, 74,262 என்ற புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய குறியீட்டெண் நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து, 22,530 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. மற்ற துறை சார் குறியீடுகளும் ஏற்றத்தில் உள்ளன.
2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய, திறன்மிக்க, வளர்ந்த இந்தியாவை உருவாக்க பாஜக போராடிவருகிறது எனக் கூறிய ராஜ்நாத் சிங், ஊழலுக்கு எதிராக பாஜக அரசின் போர் வெல்லும் என்றார். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வறுமையை முழுமையாக ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பாஜகவில் இணைந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியல் கட்சித் தலைவர்களின் மீது வெறும் 3% வழக்குகளே உள்ளதாகவும், அதில் ஒருவரின் வழக்கு கூட கைவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். பாஜக, அமலாக்கத்துறை, சிபிஐயை வைத்து ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
குஜராத்தில் கடந்த 27ஆம் தேதி போதைப் பொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்று, கடல் பகுதியில் ₹600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக போதைப் பொருட்களைக் கடத்த, குஜராத் எளிய வழியாக இருக்கிறது. இந்தியாவிலேயே நீளமான கடற்பரப்பினை கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்தான். அங்கு எல்லை சோதனைகளை அதிகரிக்க கோரிக்கைகள் எழுகின்றன.
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கக் கூடியது வெள்ளரி. கோடையில் அதிகமாக கிடைக்கும் வெள்ளரியை கொண்டு ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். வெள்ளரிக்காய், இஞ்சி, கொத்தமல்லி, நெல்லி, கற்றாழை, பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் மோரை ஊற்றி, சில வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்தால் சுவையான வெள்ளரி மோர் சர்பத் ரெடி.
Sorry, no posts matched your criteria.