India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரன் மெஷின் விராட் கோலி அரை சதம் அடித்துள்ளார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 51* ரன்கள் அடித்துள்ளார். தற்போது வரை RCB 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. RCB வெற்றிபெற 103 ரன்கள் தேவை உள்ள நிலையில், கைவசம் இன்னும் 60 பந்துகள் உள்ளது. RCB வெற்றிபெறுமா?
தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அணைகளில் நீர் மட்டம் சரிந்துள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 42 அணைகளில் நீர் இருப்பு வெறும் 17 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 53.33 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) ஆகும். இந்த ஆண்டு, நீர் இருப்பு வெகுவாக சரிந்து தற்போது 8.86 பிசிஎம் நீர் மட்டுமே உள்ளது.
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க முதியவர் ஒருவர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த பிரம்மநாயகம்(78) என்பவர் தனது காரின் மேற்பகுதியில் தென்னை மட்டைகளை வைத்துக் கட்டிப், பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மற்றவர்கள் இதைக் கண்டு சிரித்தாலும், காருக்குள் குளுமையாக உணர்வதால் கடந்த சில ஆண்டுகளாக இந்த முறையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபிகா, தென்கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பின்னர் இறுதிப் போட்டியில் அவர், தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் மோதினார். இதில், 0-6 என்ற புள்ளிக் கணக்கில் தீபிகா குமாரி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அரவிந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான சீட் கிடைக்கவில்லை என்பதால் பதவி விலகவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தீபக் பதரியா, டெல்லி காங்கிரசின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய விதிப்படி, டிக்கெட்டை ரத்து செய்தால் இனி ₹60 மட்டுமே வசூலிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி வருவாய் வழங்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதிப் பகிர்வில் துரோகம் இழைப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி நிவாரணமாக கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 1% கூட கொடுக்கவில்லை என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஆனால், கர்நாடகாவுக்கு தேர்தலைக் கருத்தில் கொண்டு ₹3498.82 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக வைகோ சாடியுள்ளார்.
பாஜகவின் பிரசாரத் தொனி மாறியுள்ளதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘400 சீட்’ வெற்றி எனப் பேசி வந்தவர்கள், தற்போது தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறித்துப் பேசி வருவதாகத் தெரிவித்தார். மேலும், மக்கள் ‘மனத்தின் குரல்’ கேட்க விரும்பவில்லை என்றும், அரசியலமைப்பின் குரலைக் கேட்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது மோதிரம், வாட்ச் போன்ற அணிகலன்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நோயாளிகள் வார்டு, ஐசியூ, அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
RCB அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது. சரவெடியாக வெடித்துத்தள்ளிய ஷாருக் கான் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் 84 ரன்கள் குவித்தார். இதையடுத்து RCB அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. RCB தரப்பில் மேக்ஸ்வெல், சிராஜ், ஸ்வப்னில் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.