India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்கு பருவமழையில் கிடைத்த நீரை, தமிழக அரசு சேமிக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறியதே வறட்சிக்கு காரணம் என்றும், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த தண்ணீர் எங்கே போனது? அவற்றை சேமித்து வைக்காததால் தான் இன்று 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, நேற்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஒரு படத்திற்கு, ₹3 முதல் ₹4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கு அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு, ₹110 கோடி என கூறப்படுகிறது.
இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு, திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, மோடி அரசு மனிதாபிமானமற்ற அனைத்து வரம்புகளையும் தாண்டி வருகிறது என்றும், ஒரு முதல்வர் பயங்கரவாதியாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்று நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.
GT-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் வில் ஜாக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 4 Four, 10 Six என விளாசி ரசிகர்களை கவர்ந்தார். 31 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அடுத்த 10 பந்துகளில் 46 ரன்கள் குவித்து சதம் விளாசினார். இது அவரது முதல் ஐபிஎல் சதம் ஆகும். அவரது அசத்தலான பேட்டிங்கால், RCB அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாஜக அரசு, கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தை வஞ்சித்து வருவதாக ரா.முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையால், தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனதாகவும், அந்தச் சூழலில் கரம் நீட்டி உதவாத பாஜக அரசு, அதை உதாசினப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம்
▶EVM இயந்திரங்கள் குறித்துக் காங்., பொய்யான தகவலைப் பரப்புகிறது: பிரதமர் மோடி
▶காங்கிரஸ் இருக்கும் வரை இடஒதுக்கீட்டைப் பறிக்க முடியாது: ராகுல் காந்தி
▶அனைவரும் வாக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்: பிரேமலதா
▶படிப்புடன் விளையாட்டையும் இணைத்துக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
▶IPL: பெங்களூரு அணி வெற்றி
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் வில் ஜாக்ஸ் 6 நிமிடங்களில் அரை சதத்திலிருந்து சதத்தை நோக்கி முன்னேறினார். 31 பந்தில் 54 ரன்களை எடுத்த அவர், அடுத்த 6 நிமிடத்தில் 41 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். 50 ரன்களை கடந்த அவர் சதமடிக்க 10 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதில், 5 பவுண்டரியும், 10 சிக்சர்களும் அடங்கும். பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவிய அவர், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய CSK அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய SRH அணி, CSK அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதனால் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. அபாரமாக பந்துவீசிய தேஷ்பாண்டே, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Sorry, no posts matched your criteria.