news

News April 29, 2024

IPL: ஆட்டநாயகன் விருது வென்ற ருதுராஜ்

image

ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், 10 Four, 3 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தனது 17ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்த அவர், 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத்துக்கு அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது சென்னை அணி.

News April 29, 2024

யார் பிரதமரானாலும் இந்தியா வளர்ச்சி அடையும்

image

அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை தனது சாதனையாக பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், 2004இல் 12ஆவது இடம், 2014இல் 7ஆவது இடம், 2024இல் 5ஆவது இடம் என இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் எந்த மாய மந்திரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

காந்தியின் பொன்மொழிகள்

image

✍கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால், தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
✍பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதுபோல முதலில் நீ இரு.
✍நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
✍சிக்கனம் தான் பெரிய வருமானமாகும்.
✍ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்
✍மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே.

News April 29, 2024

சமுத்திரக்கனியால் 1,000 பேர் பிழைப்பார்கள்

image

நடிகர் சமுத்திரக்கனி அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார் என இயக்குநர் பாலா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவருக்கு இருக்கும் மனது பெரியது என்றும், அவர் படங்களை எப்போதும் ஊக்குவித்துக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற குணம் அவரிடம் தொடர்ந்து இருந்தால், இன்னும் 1,000 பேர் பிழைப்பார்கள் என பாராட்டியுள்ளார்.

News April 29, 2024

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

image

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவரை 81,212 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 41,690 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

News April 29, 2024

IPL: பெங்களூரு அணியின் புதிய சாதனைகள்

image

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி புதிய சாதனை படைத்துள்ளது. வில் ஜாக்ஸ் 100*(41) & விராட் கோலியின் 70*(44) அதிரடியான ஆட்டத்தால், 201 ரன்கள் என்ற இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டி RCB அணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதுவே RCB அணியின் அதிவேக 200+ ரன் சேஸ் ஆகும். மேலும், ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை (19 சதங்கள்) பதிவு செய்த அணி என்ற பெருமையையும் பெங்களூரு அணி பெற்றது.

News April 29, 2024

ஏப்ரல் 29: வரலாற்றில் இன்று

image

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லியன்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி ராணுவம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – ஹிட்லர் தனது நீண்ட நாள் காதலியை, பெர்லின் சுரங்கத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
1967 – அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த காரணத்தினால், குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் பதக்கங்கள் திரும்பப் பெறப்பட்டன.

News April 29, 2024

வகுப்புக்கு ஒரு ஆசிரியா்: ராமதாஸ் வலியுறுத்தல்

image

அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியா் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்காக ₹7,000 கோடி ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News April 29, 2024

கைதி பட பாணியில் விஜய் தேவரகொண்டா படம்

image

கௌதம் தினனுரி இயக்கும் புதிய படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படம் ‘கைதி’ படத்தை போல, பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருகிறது. விறுவிறுப்பான கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால், இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News April 29, 2024

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி

image

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த புண்ணியகோடி (46), தனது நண்பர்களுடன் தரிசனம் முடித்து விட்டு மலை ஏறத் தொடங்கினார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த அவரை, நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது 9ஆவது உயிரிழப்பு ஆகும்.

error: Content is protected !!