news

News April 29, 2024

சிவன் கோயிலில் செய்யக் கூடாதவை

image

*சிவப்ரியனான நந்தியை வழிபடுவதற்கு முன் சிவபெருமானை வழிபடக் கூடாது. *சண்டிகேஸ்வரரை கைத்தட்டி வணங்கக் கூடாது. *கொடி மரத்தை தவிர்த்து வேறெங்கும் விழுந்து சாஷ்டாங்கமாக கும்பிடக் கூடாது. *பலிபீடம், நந்தி, கோபுரம் போன்றவற்றின் நிழலை மிதிக்கக் கூடாது. *சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது. *நடந்துகொண்டே நெற்றியில் திருநீறு இடக்கூடாது. *ஸ்தல விருட்சமான வில்வத்தைப் பறிக்கக் கூடாது.

News April 29, 2024

100 நாள்களை கடந்த ‘வேட்டையன்’ படப்பிடிப்பு

image

ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படமானது வரும் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.

News April 29, 2024

ஆவணங்களை சமா்ப்பிக்க NMC அறிவுறுத்தல்

image

இளநிலை & முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை நாளைக்குள் (ஏப்.30) சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது. சமா்ப்பிக்காத கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

IPL: CSK அணி புதிய சாதனை

image

ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 212/3 ரன்கள் குவித்தது. இதன் மூலம், T20 கிரிக்கெட்டில் அதிக முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்த (35 முறை) முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது. சோமர்செட் – 34, இந்தியா – 32, பெங்களூரு – 31 முறை பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News April 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது: வைகோ
▶ராகுல் காந்தி இந்துக்களை வெறுக்கிறார்: எல்.முருகன் விமர்சனம்
▶காங்கிரஸ் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை: பிரதமர் மோடி
▶மோடி பொய் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்: சித்தராமையா
▶INDIA கூட்டணிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்: மம்தா பானர்ஜி
▶IPL: சென்னை அணி வெற்றி

News April 29, 2024

தேஷ்பாண்டேவிடம் வீழ்ந்த ஹைதராபாத்

image

ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK வீரர் தேஷ்பாண்டே அசத்தலாக பந்துவீசியுள்ளார். 3 ஓவர்கள் வீசிய அவர், 27 ரன்கள் கொடுத்து டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அன்மோல்பிரீத், பேட் கம்மின்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 10 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி, 134 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது. இது, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

News April 29, 2024

தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது

image

காங்கிரஸ் கொடுத்த திட்டங்களை விட, அதிக திட்டங்களை பிரதமா் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளாா் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த அவர், நிதியை பொருத்தவரை மாநில பேரிடா் நிவாரணத்தை கணக்கிட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

இசையா? மொழியா? வைரமுத்து விளக்கம்

image

ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இசை எவ்வளவு பெரிதோ அதேயளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு பெயர் வைப்பது மொழி தான். ஆனால், அதற்கு அழகு சேர்ப்பது இசை என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், இசையும், மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 29, சித்திரை – 16 ▶கிழமை – திங்கள்
▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை நேரம்: 1:30 PM – 3:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶திதி: சஷ்டி
▶நட்சத்திரம்: 4:42 AM வரை பூராடம் பிறகு உத்திராடம்

News April 29, 2024

தண்ணீர் என்னும் அருமருந்து

image

சிறுநீரகங்கள் சரிவர இயங்க, ஒருவா் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீா் அருந்துவது அவசியம். அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மி.லி. ஆக தேவைப்படும். 60 கிலோ எடை கொண்ட ஒருவா், கோடை காலத்தில் 3.6 – 4 லிட்டா் வரை தண்ணீா் குடித்தே ஆக வேண்டும். அப்போது தான் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய முடியும். தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.

error: Content is protected !!