India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SRH-க்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் CSK கலக்கியது. ருதுராஜ் தனது மிரட்டல் அடி மூலம், வருங்கால இந்திய அணியின் எதிர்காலம் என்பதை நிரூபித்தார். ஹெட், அபிஷேக், மார்க்ராம், நிதிஷ் ரெட்டி என பேட்டிங்கில் வலுவாக இருக்கும் SRH-ஐ CSK பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்தனர். குறிப்பாக, தேஷ்பாண்டே 2வது ஓவரில் 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
பணியின்போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, பணி நேரத்தில் போலீசார் (SIக்கு கீழ் ரேங்கில் உள்ளவர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்த இவர், தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன், முக்கிய பிரமுகர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் சாமராஜநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹனூர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாக்கு இயந்திரங்கள் சூறையாடப்பட்டன. இதனால், இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஏவப்பட்ட அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் மோதுவதற்கான அபாயம் உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடிய அவர், சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 5 ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றின் வளிமண்டலத்தைப் பார்க்கும்போது, சில கோள்களில் தண்ணீர் இருப்பதாகக் கூறிய அவர், அங்கேயும் உயிரிகள் (ஏலியன்) இருக்கலாம் என்றார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இட ஒதுக்கீடு நீக்கப்படாது, அதனை நீக்குபவர்களையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் உறுதியளித்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்., எம்.பி மாணிக்கம் தாகூர், பாஜக ஆட்சியில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், அமித் ஷாவின் பொய்கள் தோற்கடிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் ₹25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் வரையாடுகளைக் கணக்கெடுக்கும் பணி, இன்று தொடங்கி மே 1ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
2023 – 24 நிதியாண்டு மற்றும் அதன் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று அல்ட்ரா டெக் சிமென்ட், ட்ரென்ட், யூகோ வங்கி, டாடா கெமிக்கல்ஸ், ஜில்லெட் இந்தியா, பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், எல்ஜி பாலகிருஷ்ணா அண்ட் பிரதர்ஸ் உள்ளிட்ட 31 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகிறது. முடிவுகளைப் பொறுத்து, அந்நிறுவன பங்கு விலையில் தாக்கம் இருக்கும்.
ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஹைதராபாத் அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிப் போட்டிகளில் பங்காற்றிய வீரர் என்ற புதிய மைல் கல்லை அடைந்தார் எம்.எஸ்.தோனி. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருமுறைகூட அவுட்டாகாத வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில், ரேவண்ணா மீது பாலியல் தொல்லை, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, இவரின் மகன் பிரஜ்வால் 100க்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.