India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 5 நாள்கள் ஓய்வெடுக்கிறார். முதல்வர் வருகையிலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
கொல்கத்தாவில் பெண் ஒருவரின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தியின் திருகாணியை மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர். அந்தப் பெண் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகாணி கழன்ற நிலையில், அவர் மூச்சை இழுக்கும்போது நுரையீரலுக்குள் சிக்கிக் கொண்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்த அந்தப் பெண், தொடர் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைக்குப் பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுள்ளார்.
ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்றிரவு ஒரு சிசிடிவி பழுதானது. அங்கு 220க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், ஒரு கேமரா மட்டும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயலிழந்தது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜகோபால், IP முகவரியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பழுதானதாக விளக்கமளித்துள்ளார். ஏற்கெனவே, நீலகிரியில் சிசிடிவி செயலிழந்தது சர்ச்சையானது.
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் அவசரத்தில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஆனால், மற்ற வேளை உணவுகளை விட காலை உணவு மிகவும் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். காலை உணவு இன்சுலின் சுரப்பைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. காலை உணவு உண்ணாவிட்டால் இன்சுலின் குறைந்து நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உண்டு. நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கக் காலை உணவு மிகவும் அவசியம்.
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் (C), ஆலன், போல்ட், பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, பெர்குசன், ஹென்றி, மிட்செல், நீஷம், பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னர், சோதி, சவுத்தி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில் நட்சத்திர வீரர்களாக இருக்கும் வில்லியம்சன், ரச்சின், கான்வே அவுட் ஆஃப் பார்மில் இருக்கின்றனர். இது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது. அதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்றுடன் அவை நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், திட்டமிட்டபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
மத்தியில் ஆம் ஆத்மி ஆதரவு இல்லாமல் அடுத்த ஆட்சி அமையாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த 2 கட்டத் தேர்தலில் 120 – 125 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றார். டெல்லியில் I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது
மே 1ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள 49ஆவது லீக் ஆட்டத்தில், CSK – PBKS அணிகள் இடையே பலப்பரிட்சை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது. PAYTM & www.insider.in தளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.4,000, ரூ.6,000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
சர்ச்சைக்குப் பெயர் பெற்ற அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது கனவு ப்ராஜெக்ட் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகரான சந்தீப் ரெட்டிக்கு, ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க வேண்டும் என்பதுதான் கனவாம். ஜாக்சனாக நடிக்க நடிகரும், தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால், ஹாலிவுட் சென்றுவிடுவேன் எனக் கூறுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6ஆவது கட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. இதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இல்லையென்றால், 7ஆவது கட்ட அறிவிப்பாணையில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில், திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.