India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெறவிருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை (ஏப்ரல் 29) பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மறுதேதி குறிப்பிடாமல் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்துவரும் படம் ‘இந்தியன்-2’. ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே இறுதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டியில் விளையாட வீரர்கள் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீச வேண்டும். அதற்கு சிராஜ் தகுதியானவர் இல்லை என்று விமர்சித்த அவர், நான் தேர்வாளராக இருந்தால் சிராஜை இந்திய அணிக்கு எடுக்கவே மாட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும், சிராஜுக்குப் பதிலாக அவேஷ் கான் இந்திய அணியில் விளையாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிகமாக வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகமாக வாட்டி வதைக்கிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதிக வெப்பம் பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய CSK கேப்டன் ருதுராஜ் 2 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய அவர் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய அவர், இன்று சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் அளித்தார். இவரது அதிரடியால் CSK இன்று 212 ரன்களைக் குவித்துள்ளது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மோடியின் தலைமையில் நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்க பிரதமர் ஒருவரே காரணம் என்ற அவர், அதனால் தான் இந்தியா செழிப்பை நோக்கி முன்னேறி வருவதாக கூறினார். மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிடும் நிலையில், மே 20இல் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் அடுத்தடுத்து 2 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை அணி சாதித்துள்ளது. 46வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட CSK, முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய வீரர்கள் 212/3 ரன்கள் குவித்தனர். இதற்கு முன் ஏப்.23இல் லக்னோ அணியை எதிர்கொண்ட CSK, 210/4 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஹோம் கிரவுண்டில் தொடர்ச்சியாக 2 முறை CSK அணி இரட்டை சதம் விளாசியுள்ளது.
அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது. நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு அருகம்புல் சாறு மிகவும் பயன் தரக்கூடியது. மேலும், அருகம்புல் சாற்றில் கால்சியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் வலுவடையும். அருகம்புல் சாறை தயாரித்த 15 நிமிடங்களுக்குள் பருகிவிட வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள சத்துக்கள் ஆக்சிஜனேற்றம் ஆகிவிடும்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 98, மிட்செல் 52, டூபே 38* தோனி 5* ரன்கள் குவித்தனர். SRH தரப்பில் புவனேஷ்வர் குமார், உனத்கட், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து SRH அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று CSK வெற்றிபெறுமா?
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் மே 1ஆம் தேதி சிலிண்டர் விலைக் குறையலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது காரணமாக கூறப்படுகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹818.50 (14.2 KG), வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹1930ஆக உள்ளது.
Sorry, no posts matched your criteria.