news

News April 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம்
▶EVM இயந்திரங்கள் குறித்துக் காங்., பொய்யான தகவலைப் பரப்புகிறது: பிரதமர் மோடி
▶காங்கிரஸ் இருக்கும் வரை இடஒதுக்கீட்டைப் பறிக்க முடியாது: ராகுல் காந்தி
▶அனைவரும் வாக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்: பிரேமலதா
▶படிப்புடன் விளையாட்டையும் இணைத்துக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
▶IPL: பெங்களூரு அணி வெற்றி

News April 29, 2024

6 நிமிடங்களில் வில் ஜாக்ஸ் நிகழ்த்திய மாயாஜாலம்

image

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் வில் ஜாக்ஸ் 6 நிமிடங்களில் அரை சதத்திலிருந்து சதத்தை நோக்கி முன்னேறினார். 31 பந்தில் 54 ரன்களை எடுத்த அவர், அடுத்த 6 நிமிடத்தில் 41 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். 50 ரன்களை கடந்த அவர் சதமடிக்க 10 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதில், 5 பவுண்டரியும், 10 சிக்சர்களும் அடங்கும். பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவிய அவர், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

News April 29, 2024

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

image

SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய CSK அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய SRH அணி, CSK அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதனால் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. அபாரமாக பந்துவீசிய தேஷ்பாண்டே, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

News April 28, 2024

இதற்காகவே அதிக இடங்களில் வெல்ல பாஜக நினைக்கிறது

image

அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தவே பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற நினைக்கிறது என சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் பாஜகவிடம் இருந்து நாட்டை காக்கவேண்டிய தேர்தல் இது என்றார். நாடு எந்தப் பாதையில் போகப்போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இது சிறப்பு வாய்ந்த தேர்தல் எனக் கூறினார்.

News April 28, 2024

விமர்சிப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை

image

அணிக்காகப் போட்டிகளை வென்று கொடுப்பதே என் வேலை, அதை 15 ஆண்டுகளாகச் செய்து கொண்டிருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிராகத் தனது ஆட்டத்தை விமர்சிப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்ற கோலி, இன்றைய ஆட்டத்தை அவர்கள் அதிகம் விரும்புவார்கள் என்றும் தெரிவித்தார். குஜராத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

News April 28, 2024

மாயாவதியின் மருமகன் மீது வழக்குப்பதிவு

image

பாஜகவையும், தலிபான்களையும் ஒப்பிட்டு சர்ச்சையாக பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உ.பியில் புல்டோசர்களின் அரசாங்கம் நடப்பதாக குற்றம் சாட்டிய அவர், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்துவதை யோகி செய்வதாக குற்றம் சாட்டினார். பகுஜன் சமாஜ் கட்சி உ.பி-யில் எந்தக் கூட்டணியிலும் கூட்டணியில் இணையாமல் தனித்துத் தேர்தலை சந்திக்கிறது.

News April 28, 2024

இந்த ராசியினரைத் தேடிப் பணம் வரும்

image

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்குக் காசு தங்காது. ஆனால், சில ராசியினர் பிறப்பிலேயே பணத்தைத் தன் வசம் ஈர்க்கும் யோகம் பெற்றிருப்பார்கள். மிதுனம், தனுசு, மகரம், கும்ப ராசியினர் தான் அவர்கள். இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பணம் வந்துகொண்டே இருக்கும். பணத்தைக் கைப்பற்றுவதில் இந்த ராசியினர் வல்லமை படைத்தவர்கள். இவர்களது திறமையால் பண வரவில் எந்தக் குறையும் இருக்காது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

News April 28, 2024

73 ஆண்டுகளில் இதுதான் அதிகம்

image

1951ஆம் ஆண்டுக்குப் பின் ஊட்டியில் இன்று மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதைவிட இன்று அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் கோடை வாழிடங்களுக்குப் படையெடுத்து வரும் நிலையில், அங்கும் வெப்பநிலை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 28, 2024

ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?

image

ORS கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசலை கொடுக்கலாம். மேலும் கோடைக் காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியைத் தடுக்கவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

error: Content is protected !!