India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகே, பெங்களூருவில் குண்டு வெடித்ததாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பிரசாரம் செய்த அவர், குண்டு வெடித்ததை சிலிண்டர் வெடித்ததாக காங்கிரஸ் அரசு கூறியதாகத் தெரிவித்தார். தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்காகக் கண்ணீர் வடிப்பதுதான் காங்கிரசின் சாதனை என விமர்சித்த அவர், டெல்லியில் இப்படியொரு சம்பவம் நடந்தபோதும் காங்கிரஸ் கண்ணீர் வடித்ததாகக் கூறினார்.
இந்திய அணியின் தேர்வாளராக நான் இருந்தால் சஞ்சு சாம்சனை முதலில் தேர்வு செய்வேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சில வாரங்களில் டி20 உலக்கோப்பையில் விளையாடச் செல்லும் இந்திய அணியின் விமானத்தில் சஞ்சு சாம்சன் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பரப்புரைப் பாடலை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து பாடல் எழுதியிருப்பது நீதித்துறையை அவமதிப்பது போல இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரேவிடமும் தேர்தல் ஆணையம் இதே போன்று பாடலை மாற்ற உத்தரவிட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்தார்.
தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த பொதுமக்களுக்கு மாவட்டம் தோறும் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ORS பாக்கெட் வழங்கப்படும் இடங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால், தேவையில்லாத அலைச்சலை குறைக்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலமாக ORS பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு ப்ளஸி பவுலிங் தேர்வுசெய்துள்ளார். இதையடுத்து GT இன்னும் சற்றுநேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் GT 7ஆவது இடத்திலும், RCB கடைசி இடத்திலும் உள்ளது. RCB வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்தது ஏன் என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில், காங்கிரஸின் வெற்றியை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஊரகம், மத்திய பெங்களூரு மற்றும் கோலார் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
வெளிநாட்டினர் இந்திய திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்விப் படிப்புகளில் சேருவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாது.
இளைஞர்கள் படிப்புடன் ஏதாவது ஒரு விளையாட்டையும் அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மிக இளம் வயதில் FIDE Candidates தொடரில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் குகேஷை வாழ்த்தி தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இளைஞர்களின் உடலையும், மனதையும் விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள விளையாட்டு உதவும் என அறிவுரை வழங்கினார்.
ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்த ராகுல், ஓட்டுக்களைப் பெற அயோத்திக்கு வரவுள்ளார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். உ.பி.,யில் பிரசாரம் செய்த அவர், “கோவில் திறப்பு விழாவுக்கு வராமல் கடவுளுக்குத் துரோகம் செய்தவர் ராகுல். அவர் மீண்டும் அமேதியில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரசுக்கு வாக்களித்தால் உங்களின் சொத்துக்கள் பறிக்கப்படும்” எனக் கூறினார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு அங்கமாக இருந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து சன் தொலைக்காட்சியில் புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
Sorry, no posts matched your criteria.