India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அம்பானி, அதானி ஆகியோரின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவில்லையென கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். கர்நாடக முதல்வராக இருக்கும் நானே 27 லட்சம் விவசாயிகளின் ரூ.8,165 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
*உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் *உயர் இரத்த அழுத்தத்துக்கு (BP) அதிகமான உப்பு முதன்மை காரணம் *உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும் *குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது *ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது *அதேநேரம் உடலுக்கு குறைந்த அளவு உப்பு தேவை.
*88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. *EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது *2ஆம் கட்ட வாக்குப்பதிவில் NDA கூட்டணிக்கு கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஏமாற்றமளிக்கப் போவதாக மோடி கருத்து *கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தேர்தலில் வெற்றிபெறும் போதெல்லாம் காங்கிரஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எந்தவொரு கேள்வியையும் எழுப்பாதென பாஜக அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போது மக்களவைத் தேர்தலில் தோற்று போய் விடுவோமென்ற பயத்தில், இவிஎம் நாடகத்தை நடத்தி வருவதாக விமர்சித்துள்ள அவர், மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள பாஜக 25 இடங்களிலும் வெற்றிவாகை சூடுமென தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261/6 ரன்கள் குவித்தது. 262 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு, பேர்ஸ்டோ (108*) – சஷாங்க் சிங் (72*) ஜோடியின் அதிரடி ஆட்டத்தால், 18.3 ஓவரில் 262/2 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
✦குடற்புண்களைக் குணமாக்க உதவுகிறது. ✦வறட்டு இருமலுக்கு அதிமதுரத்துடன் இலவங்கப்பட்டைச் சேர்த்துப் பொடியாக்கி சிறிது சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ✦சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. ✦தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. ✦தலைபாரம் இருக்கும் போது இதை நீர்விட்டு அரைத்து பற்றுப்போட விரைவில் பாரம் இறங்கும். நாள்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக இலவங்கப்பட்டை உள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வீரர் பேர்ஸ்டோ அதிரடி சதம் விளாசினார். முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 261/6 ரன்கள் குவித்தது. 262 என்ற கடின இலக்கை துரத்தும் பஞ்சாப் அணிக்கு, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பேர்ஸ்டோ 8 சிக்சர், 8 பவுண்டரிகளுடன், 45 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தற்போது பஞ்சாப் அணி 16.1 ஓவரில் 210/2 ரன்கள் எடுத்துள்ளது.
‘ஜப்பான்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், நல்ல வசூலைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.