India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு வந்த பிறகு தான் சந்தித்த முதல் ஆள் சூர்யா தான் என்ற அவர், நீண்ட காலம் நண்பர்களாகவே இருந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். 1999இல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஹிட் அடித்தன.
அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. 46 வயதான செங் சேபன், கடந்த 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். பவர்பால் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் அவருக்கு இந்திய மதிப்பில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதில் வரிப் பிடித்தம் போக அவருக்கு ₹3,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாதெனக் கருத்து தெரிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக மே 6க்குள் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், துணிக் கடை ஓனருமான விக்கி (எ) விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். N.N.கார்டன் பகுதியில் KGF என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி. இவரது கடையில் வேலை பார்த்த ரிஸ்வான் என்பவரை, கடந்த மாதம் ஆள் வைத்து தாக்கியதாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விக்கியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனர்.
மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கிய எம்பி பிரிஜ்பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்கு மக்களவைத் தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கெய்சர்கஞ்ச் தொகுதியில் பிரிஜ்பூஷண் மீண்டும் போட்டியிடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பாஜக இம்முறை வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு பதில், மகன் கரண்சிங் பூஷண் சிங்கை அறிவித்துள்ளது.
கோலி, சூரியகுமாரை விட ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர் என்று முன்னாள் வீரர் முகம்மது கைப் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை அணிக்கு ஹர்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கைப் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அவர், ஐசிசி போட்டிகளில் கோலி, சூரியகுமாரை விட ஹர்திக் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் எனத் தெரிவித்தார்.
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம்முடைய மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு, ஆசியா, ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்நிலையில், 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் குகையில் வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் தற்போது மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆறாம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தைப் பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டுமென MNMK கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2 ஆண்டுகளாகப் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் விமர்சனம் செய்தும், சர்ச்சைக்குரிய சீட்டுக்கட்டுகள் குறித்த பாடப்பகுதியை நீக்காமல் பாடநூல் கழகம் அலட்சியம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியோருக்கு ரத்தம் உறைதல், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டன. இதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு ரத்தம் உறைதல், பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என அந்த நிறுவனம் கூறியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ’25 years of Pan india swag’ என்ற பெயரில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மனோஜ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.