India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவுத் தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் நோட்டீஸ் அளிக்கப்பட்டு பதில் கோரப்பட்டுள்ளது. மேலும் ஒரு புகார் மீது விசாரணை நடக்கிறது.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அதில், ஐஎஸ் ஆதரவாளர் அசாருதீன் கைதைக் கண்டிக்கும் விதமாக கோவையில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 அக் 23இல் கோவை – உக்கடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தாஹா நசீர் உள்ளிட்ட 14 பேரை என்ஐஏ கைது செய்தது.
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ₹276 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ₹3454 கோடியை வாரி வழங்கியுள்ளது.
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘THE GOAT’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு ஜூன் மாதம் என வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். இதனால், அது விஜய் பிறந்தநாளான ஜூன் 22ல் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
2ஆம் கட்டத் தேர்தலில் திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகரித்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குறைந்துள்ளது. 13 மாநிலங்களில் அதிகபட்சமாக திரிபுராவில் 79.46% பதிவாகியுள்ளது. மணிப்பூரில் 77.32%, உத்தரப் பிரதேசத்தில் 62%, கேரளாவில் 70.21%, ம.பி.யில் 57.88%, அசாமில் 71.11%, மகாராஷ்டிராவில் 57.83%, ராஜஸ்தானில் 64.07%, பிஹாரில் 55.08%, ஜம்மு-காஷ்மீரில் 71.91%, மேற்கு வங்கத்தில் 71.84% பதிவாகியுள்ளது.
ஐபிஎல் 2024இல் ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்துள்ளன. ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 287, 277, 266 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா 272 மற்றும் 261 ரன்களும், பஞ்சாப் 263 ரன்களும் விளாசியுள்ளன. ரன்குவிப்பு என்றதும் சென்னை, மும்பை அணிகளே நினைவுக்கு வரும். ஆனால் 2024 தொடரில் ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் பேட்டிங்கில் கலக்கி வருகின்றன.
கடந்த சில நாள்களாக தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்கு மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கொடைக்கானலுக்கு செல்வதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து காரில் கொடைக்கானல் செல்கிறார். அங்கு மே 4ஆம் தேதி வரை குடும்பத்துடன் தனியார் விடுதியில் ஓய்வு எடுக்க உள்ளார்.
‘The GOAT’ படத்தின் ஷூட்டிங் முடிந்த சீன்களின் ரஃப் எடிட்டிங்கைப் பார்த்த நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார். விளையாட்டுத்தனம், ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட மாஸ் கமர்ஷியல் கலவையாகப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், ரிலீஸ் வரைக்கும் அமைதியாக இருக்குமாறு படக்குழுவிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேர் வாக்களித்துள்ளனர். கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் மக்களவைக்கு 2ஆம் கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் என 85 பேர் வாக்களித்துள்ளனர். வேறு வேறு ஊர்களில் வசிக்கும் நிலையிலும், வாக்களிக்க சிக்பள்ளாப்பூர் வந்துள்ளனர்.
ஆந்திராவில் கடந்த ஆண்டு 2 பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்துக்கு, ஓட்டுநர்கள் ஃபோனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்ததே காரணம் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்களின் மொபைல் சிக்னல்கள், டேட்டா பயன்பாட்டை ஆய்வு செய்ததில், அவர்கள் கிரிக்கெட் பார்த்ததாக எந்த அறிகுறியும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.