India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா? என ராகுலுக்குப் பியூஷ் கோயல் சவால் விடுத்துள்ளார். அமேதியில் தோல்வி அடைந்த ராகுல் தற்போது வயநாடு சென்றுள்ளார். அவருக்கு அங்கும் தோல்வியே கிடைக்கும் என்ற அவர், ராகுல் 4 முதல் 5 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஒரு தொகுதியில் வெல்ல முடியும் என்றார். 2019 தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
கோவாவில் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர், அவர்களைப் பார்க்க வீட்டிற்குச் சென்றபோது, 2 மகன்களும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், தினமும் ஒரு பேரிச்சை பழம் மட்டுமே சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 258 ரன்கள் இலக்கைத் துரத்தி ஆடிய MI 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. கடைசி வரை வெற்றிக்காக போராடிய திலக் வர்மா 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மும்பை 14 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.
கேரளாவில் பரவிவரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியால் தமிழகத்தில் முட்டை விலை குறைந்துள்ளது. நாமக்கல் பண்ணைகளில் கடந்த வாரம் 5 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 40 காசுகள் குறைந்து ₹4.60ஆக உள்ளது. இதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ள நிலையில், வரும் நாட்களில் நிலைமையைப் பொறுத்து முட்டை விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் தொடக்க காலத்தில் பல்வேறு நிராகரிப்புகளைச் சந்தித்ததாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பல காரணங்களுக்காக திரையுலகில் நிராகரிப்பைப் பார்த்திருப்பதாகக் கூறிய அவர், யாரோ ஒருவரின் காதலி நடிப்பதற்காக தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நிராகரிப்பை முழுமையாக உணர வேண்டும். அப்போதுதான் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என்றார்.
கர்நாடகாவில் 3ஆம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள 14 தொகுதிகளுக்கு 13 அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நியமித்துள்ளார். ஏப்ரல் 26இல் 14 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக வெற்றியை காங்கிரஸ் முக்கியமாக பார்க்கும் நிலையில், முக்கிய அமைச்சர்களைத் தொகுதிகளில் களம் இறக்கிவிட்டுள்ளது.
ஸ்மார்ட்போனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை. பெரும்பாலான போன்கள் ஆண்ட்ராய்டு OS மூலமே இயங்குவதால் அவற்றின் செயல்பாடுகள் ஒரே போன்றுதான் இருக்கும். அதனால், தேவைக்கேற்ப போனைத் தேர்ந்தெடுக்கலாம். அதிகமாகப் பயணிப்பவர்கள் நல்ல பேட்டரி ஸ்டோரேஜ் போனையும், கேம் பிரியர்கள் அதிக ரேம் கொண்ட போனையும், ரீல்ஸ் பிரியர்கள் அதிகக் கேமரா குவாலிட்டி கொண்ட போனையும் தேர்ந்தெடுக்கலாம்.
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள், +2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.unom.ac.in இணையத்தளத்தை அணுகவும்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து LSG இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 7 வெற்றிகள் பெற்றுள்ள RR முதல் இடத்திலும், 5 வெற்றிகள் பெற்றுள்ள LSG 4ஆவது இடத்திலும் உள்ளது. முன்னதாக மார்ச் 24இல் நடைபெற்ற போட்டியில் RR வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
‘கல்கி 2898 கி.பி’ படம் ஜூன் 27இல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரபாஸ் – நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அமிதாப், கமல், பிரபாஸ், திஷா பதானி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தப் படம், முதலில் மே 9ஆம் தேதி வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.