news

News April 27, 2024

ஐசிஐசிஐ வங்கியின் வட்டி வருவாய் ரூ.19,093 கோடி

image

ஐசிஐசிஐ வங்கி கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 17% உயர்ந்து ரூ.10,707 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.9,122 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 8% அதிகரித்து ரூ.17,667 கோடியிலிருந்து ரூ.19,093 கோடியாக உயர்ந்துள்ளது. வாராக் கடனைப் பொறுத்தமட்டில் 2.81%இல் இருந்து 2.16%ஆக குறைந்துள்ளது.

News April 27, 2024

‘ஸ்டார்’ டிரெய்லரைப் புகழ்ந்த கவுதம் மேனன்

image

ஸ்டார் படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் எனத் தோன்றுவதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். படத்தின் காட்சி மற்றும் தோற்றும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்த அவர், ஒரு நல்ல படமாக இது நிச்சயம் இருக்கும் என்று நம்பிக்கை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கவின் நடித்துள்ள இந்த படம் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. யுவன் இசையில் இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News April 27, 2024

பிரதமர் மோடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்

image

சமீபத்தில் ராஜஸ்தான் பரப்புரையில், இஸ்லாமியர்கள் குறித்துப் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையானது. இதற்கு எதிராகப் பிரதமர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பிரதமரைக் கண்டித்து SDPI கட்சியினர் இன்று சென்னையில் போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தை விதிகளை மீறிப் பேசிய பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரித் தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

News April 27, 2024

வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு

image

அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டை சரிசெய்ய மே 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

News April 27, 2024

முதலில் இருந்து தொடங்கியதைப் போல உணர்ந்தேன்

image

ஹாலிவுட்டில் தனது ஆரம்ப நாள்கள் இருண்ட காலம் எனப் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய இவர், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் பேட்டி அளித்த அவர், தொடக்கத்தில் நியூயார்க் நகரம் அச்சுறுத்தியதாகவும், எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்குவதைப் போல உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

News April 27, 2024

கே.எல்.ராகுல், ஹூடா அடுத்தடுத்து அரை சதம்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிவரும் LSG வீரர்கள் KL.ராகுல், ஹூடா அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ளனர். KL.ராகுல் இன்று ஐபிஎல்லில் 4,000 ரன்களைக் கடந்து, தொடக்க வீரராகக் களமிறங்கி 4,000 ரன்களைக் கடந்த 5ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கே.எல்.ராகுல் 60*, ஹூடா 50* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தற்போது வரை LSG 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

News April 27, 2024

தோல்விக்கு பிறகு பிரதமர் பழிவாங்குகிறார்

image

கர்நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் சென்றே கர்நாடகாவுக்கான நிதியை பெற வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்த அவர், 2023 சட்டப்பேரவைத் தோல்விக்கு பிறகு மோடி கர்நாடகாவை பழிவாங்குவதாக தெரிவித்தார். வறட்சி நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்ட நிலையில், ரூ.3,499 கோடியை இன்று மத்திய அரசு ஒதுக்கியது.

News April 27, 2024

உற்பத்தியை 20% உயர்த்திய ஆவின்

image

பால், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை 20% உயர்த்தியதாக ஆவின் நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், தடையின்றி அனைத்துப் பொருள்களும் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 280க்கும் அதிகமான பால் பொருள்கள்களை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

News April 27, 2024

உலகின் விலை உயர்ந்த பாஸ்போர்ட் எது?

image

உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் அமெரிக்காவில் இருப்பதாக நீங்கள் கருதலாம். ஆனால், அது உண்மையில்லை. சமீபத்திய ஆய்வின்படி, 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் மெக்சிகோவின் பாஸ்போர்ட் பெற 231.05 டாலர் செலவாகும். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 225.78 டாலருடன் 2ஆவது இடம் பிடித்துள்ளது. மலிவான பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 18.07 டாலர்தான்.

News April 27, 2024

பெண்களின் செல்வத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள்

image

இந்தியாவின் உணர்வுகளோடு காங்கிரஸ் விளையாடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை தட்டிப்பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயன்றதாக அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் பெண்களின் செல்வத்தைக் கைப்பற்றி அதை ரோஹிங்கியாக்கள், ஊடுருவல்காரர்களிடையே விநியோகிக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!