India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நமது மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும், அதன் நீண்டகால வளர்ச்சியை அரசு கணிக்கத் தவறுவதே மின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. மின் நிலையம் ஒன்றை உருவாக்க 3 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தைத் தொடுகிறது. குறைந்தபட்சம், 5 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடாவிட்டால், மின் தேவையை ஈடுசெய்ய முடியாது.
சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை வைத்திருப்பவர்களில் தான் முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பாகல்கோட்டில் பிரசாரம் செய்த அவர், தான் சமூக வலைதளங்களை நேர்மறையாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் தோற்றவர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது குரலைப் போலியாக உருவாக்கித் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
ராதிகா முதலில் தனது நண்பர், பிறகுதான் மனைவி என சரத்குமார் தெரிவித்துள்ளார். மனைவி குறித்து சமீபத்தில் பேசிய அவர், தன்னுடைய குடும்பத்தைப் புரிந்து கொண்டு ராதிகா வாழ்க்கை நடத்துவதாகக் கூறினார். குறிப்பாகத், தனது முதல் மனைவியையும், அவருக்குப் பிறந்த குழந்தைகளையும் அரவணைத்துச் செல்வதாகவும், தனது முதல் மனைவியை அவர் வரலட்சுமியின் தாய் என்றோ, வேற்று ஆளாகவோ பார்த்தது இல்லை எனத் தெரிவித்தார்.
மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் சற்றுநேரத்தில் வெளியாகிறது. இவ்வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இருவரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையை சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், தமிழக முதல்வர் அதனை பொதுநலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அவர், அப்போது தான் தலைநகராக இருக்கும் சென்னை, கொலை நகராக மாறாமல் இருக்கும் என்றார். சென்னையில் கடந்த சில நாள்களாக, அடுத்தடுத்து கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ம.பியில் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கன்டி, தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். அங்கு, வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், வேட்பு மனுவை அவர் திரும்பப் பெற்றுள்ளார். ஏற்கெனவே, குஜராத் மாநிலம் சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். தற்போது, இந்தூர் தொகுதியிலும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது.
57 தொகுதிகளில் நடைபெற உள்ள 6ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. பிஹார் (8), ஹரியாணா (10), ஜார்கண்ட் (4), ஒடிஸா (6), உ.பி (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 2 கட்ட தேர்தலில், 189 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வரும் மே 7ஆம் தேதி, 3ஆம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் முக்கிய ஊழல் முறைகேடுகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத் துறைக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்பேரில், நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நிர்மலா உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்துள்ளது. தொடர்ந்து தண்டனை விவரங்களை நாளை வழங்க நிர்மலா தரப்பில் கோரப்பட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில், கடந்த
2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள் உட்பட 120 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.