India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதான அவர், டைட்டானிக் படத்தில் எட்வார்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக டைட்டானிக் படத்தில் இணைந்து நடித்த பார்பரா டிக்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி. டாஸ் வென்ற LSG அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய KKR அணி அதிரடியாக விளையாடியது. சுனில் நரைன் 81, சால்ட், ரகுவன்ஷி தலா 32 ரன்கள் விளாசினர். LSG தரப்பில் நவீன் உல்-ஹக் 3 விக்கெட், யாஷ் தாக்கூர், ரமன்தீப், யுத்வீர் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல் எண் மூலமாகவும், வெளிநாட்டுப் பயணிகள் இ மெயில் மூலமாகவும் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம் என தெளிவுப்படுத்தியுள்ளது.
சிமர்ஜீத் சிங் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததாக ருதுராஜ் பாராட்டியுள்ளார். ஐபிஎல் பயிற்சியின் போதே 150 கிமீ வேகத்தில் பந்து வீசிய சிமர்ஜீத் சிங்குக்கு இதுவரை வாய்ப்பு தர முடியாமல் இருந்ததாக கூறிய அவர், இன்றைய போட்டியில் தனது திறமையை அவர் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 ஒவர் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சென்னையின் வெற்றிக்கு உதவினார்.
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை நிறம் உள்ளதால், அந்த நிற டி-சர்ட்டை அணிவதாகவும், எளிமையாக இருப்பதை தாம் விரும்புவதாகவும் ராகுல் பதிலளித்தார்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுடன் ரேவண்ணா நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரிடம் 3 நாள்கள் விசாரிக்க உள்ளனர். இதே புகாரில் சிக்கிய அவரது மகன் பிரஜ்வால் தலைமறைவாக உள்ளார்.
தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் நாளை மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி கோடிமுனை கடற்கரையில் பாறை மீது நின்று வேடிக்கைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த இருவர், ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
பிரஜ்வாலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்நாடக அரசு நிதியுதவி வழங்க உள்ளது. எம்.பி பிரஜ்வால் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவானார். பிரஜ்வாலை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களில் அவர் நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் 6360938947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் <
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் அரை சதம் விளாசினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். கொல்கத்தா அணி தற்போது வரை 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. லக்னோ தரப்பில் நவீன் உல்-ஹக் மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
Sorry, no posts matched your criteria.