news

News May 5, 2024

கோலி கருத்துக்கு கவாஸ்கரின் பதில்

image

ஸ்டிரைக் ரேட் தொடர்பான கோலியின் கருத்துக்கு கவாஸ்கர் பதிலளித்துள்ளார். “கோலியின் ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருப்பதை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவதில் தவறும் இல்லை என்ற அவர், யாரும் எதுவுமே சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது” என்றார். முன்னதாக, கவாஸ்கரின் விமர்சனத்துக்கு பதிலளித்த கோலி, “ஆடுகளத்திற்கு வெளியே யாரும் எந்த கருத்தும் சொல்லலாம். ஆனால், மைதானத்தில் செயல்படுவது என்பது வேறானது” என்றார்.

News May 5, 2024

ரேபரேலியில் ராகுல் வெற்றி உறுதி

image

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். வழக்கமாக அமேதியில் போட்டியிடும் ராகுல், இந்த முறை அங்கு போட்டியிடாமல் ரேபரேலியில் போட்டியிடுகிறார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கார்கே, ரேபரேலி மக்கள் விரும்புவதால் ராகுல் போட்டியிடுவதாகவும், லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

News May 5, 2024

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மாலை 6.30 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூரில் இடியுடன் மிதமான மழை பெய்யும் என்பதால், சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, கோவை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

தொழிலாளர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

image

வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் உடல் உழைப்பு தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்ற தமிழக அரசு அறிவுறுத்தியது தெரிந்ததே. இருப்பினும், இதனை பல நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்பதை ஹீட் ஸ்ட்ரோக்கால் சென்னையில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. குடிநீர், நிழற்கூடம் & முதலுதவி வசதி ஏற்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுவதை தொழிலாளர் நல ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

News May 5, 2024

NADA அமைப்பு மீது பஜ்ரங் புனியா குற்றச்சாட்டு

image

தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பு (NADA ) அதிகாரிகளிடம், தாம் சிறுநீர் மாதிரியை பரிசோதனைக்கு தர ஒருபோதும் மறுத்ததில்லை என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா குற்றம்சாட்டியுள்ளார். சிறுநீர் மாதிரியை பரிசோதனைக்கு தர மறுத்ததாகக் கூறி, அவரை NADA சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள புனியா, வழக்கறிஞர் மூலம் அடுத்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்

image

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது, ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரிகளை வழங்க மறுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பஜ்ரங் புனியாவை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளதால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் அவருக்கு சிக்கல் ஏற்படக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News May 5, 2024

தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

image

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் செல்ல வேண்டாமென்று தமிழக மீனவர்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

வெயிலுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது

image

கோடை வெயிலில் உடலை குளுமையாக்குவதில் மாம்பழத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதில் இருக்கக்கூடிய ப்ரீபயோட்டிக் வயிற்றுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை கொடுக்கிறது. இது குடல்பகுதிக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. இதில் வைட்டமின்–சி நிறைந்திருப்பதால் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம் தோலை காக்கும். மாம்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயத்தை தவிர்த்து, அளவாக சாப்பிடுவது நலம்.

News May 5, 2024

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தால்…

image

தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒருவேளை, கெஜ்ரிவால் வெளியில் வந்தால், நிச்சயம் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படும். அது தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்றும் டெல்லி, பஞ்சாப் போன்ற ஆம் ஆத்மி வலுவாக இருக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

News May 5, 2024

IPL போட்டி: சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்

image

IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தரம்சாலா மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்கிறது. புள்ளிப் பட்டியலில் CSK 5ஆவது, PBKS 8ஆவது இடத்தில் உள்ளன.

error: Content is protected !!