India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இதய நோயால் பாதிக்கப்பட்ட வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரிய தம்பியை, ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக பெரிய தம்பி கூறும்போது, “தம்பி ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். தாத்தா நல்லாருக்கீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகாது. பூரண குணமடைந்து வருவீர்கள்” என ஆறுதல் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள், இந்தியாவுடன் சேர விரும்புவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என்ற ராஜ்நாத் சிங், படைபலத்தை கொண்டு அப்பகுதியை இந்தியா பிடிக்காது என்றும், ஆனால், அப்பகுதி மக்களே இந்தியாவோடு சேர விரும்புகின்றனர் என்றும் கூறினார்.
நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி சத்து உள்ளது. ஆண்டி ஆக்ஸிடெண்டான வைட்டமின் சி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக நம் உடலை பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கோடை காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்படுவதோடு பருவகால தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளில் இருந்தும் நம் உடலை பாதுகாக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைக்க நெல்லி உதவுகிறது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 8.50 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனியில் இடியுடன் மிதமான மழையும், ஈரோடு, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கோடை சீசனில் ஓட்டல்கள், கடைகளை திறக்க மாட்டோம் எனக் கொடைக்கானல் வணிகர்கள் எச்சரித்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறியுள்ள வணிகர்கள், உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம் எதுவும் தர மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
3ஆவது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் நடைபெற உள்ள 14 தொகுதிகளில் 10 இடங்களில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்றார். மேலும் பேசிய அவர், முதல்கட்ட தேர்தல் நடந்த 14 தொகுதிகளில் 8-9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கால்பந்து உலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 66ஆவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சவுதி ப்ரோ லீக் தொடரில், அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், அல் வேடா அணிக்கு எதிரான லீக் போட்டியில், அல் நாசர் அணி 0-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு ரொனால்டோ வித்திட்டார்.
பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் தோனி 9ஆவது வீரராக களமிறங்கி ஏமாற்றமளித்தார். 5 அல்லது 6ஆவதாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9ஆவதாக தோனி களமிறங்கினார். மேலும் படேல் ஓவரில் தாம் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி அவர் பெவிலியன் திரும்பினார். முன்னணி வீரர்கள் சொதப்பியதால் தோனி இன்று கலக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மத்திய பாஜக அரசின் மேற்பார்வையில் உள்ளதால், ரத்து செய்வதில் அதிக கால தாமதம் ஆவதாக கூறிய அவர், I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்ததும் அதற்கான நடைமுறை தொடங்கும் என்றார். தமிழ்நாடு அரசை பொறுத்த வரையில் ஒரு நுழைவுத் தேர்வு போதும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.