India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரேவண்ணா கைது செய்யப்பட்டது கர்நாடக மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக பிரமுகருமான எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் இல்லாதது பெரும் பின்னடைவு எனக் கூறிய அவர், ராகுல் காந்தியின் பேச்சு பெரிதாக எடுபடவில்லை என்றார். மேலும், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 101% வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையில் மக்கள் பிற ஊர்களுக்கு பயணிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படும் விமானங்களுடன் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பிற மாநிலங்களிலிருந்தும் சென்னைக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

* சில சமயம் கட்டாயம் நடக்கும் என்று நினைப்பது நடப்பதில்லை. நிச்சயமாக நடக்காது என்று நினைப்பது நடந்துவிடும். ஆண், பெண்களின் மகிழ்ச்சி அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சார்ந்திருப்பதில்லை.
* ஒருவன் எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ வெறுக்கவோ கூடாது. கோபத்தினாலோ போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்.

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த லக்னோ அணி மிக மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஐபிஎல்லில் LSG மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போட்டி இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததே LSG அணியின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

வெறும் வயிற்றில் காஃபி அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இயல்பாகவே நாம் சாப்பிடும்போதோ அல்லது உணவை நினைக்கும்போதோ வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். அப்படி காலையில் எழுந்து வெறும் வயிற்றில் காஃபி அருந்தும்போது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் செயல்பாட்டை பாதிக்கும். இதனால் வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை பிரச்னைகள் ஏற்படும். நாளாக நாளாக பெரிய பிரச்னைகளுக்கும் வித்திடும்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும் கூறினார். மேலும், மக்களுக்கு சேவை செய்வதையே தர்மமாகக் கொண்டு உழைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

➤1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
➤1861 – இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு பிறந்த நாள்
➤1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.
➤1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
➤2021 – தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பாண்டு நினைவு தினம்

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தண்டவாள உதவி வழங்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. தோல்வி குறித்துப் பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது என்றார். அதுமட்டுமின்றி பவர்பிளேயில் நரைன் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்க முடியாததே மோசமான தோல்விக்குக் காரணம் என்றார்.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 140 ▶குறள்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். ▶பொருள்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
Sorry, no posts matched your criteria.