news

News May 6, 2024

அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 95.75% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.64% தேர்ச்சியுடன் அரியலூர் 2வது இடத்திலும், 95.63% தேர்ச்சியுடன் ஈரோடு 3வது இடத்திலும், 95.56% தேர்ச்சியுடன் சிவகங்கை 4வது இடத்திலும், 94.13% தேர்ச்சியுடன் தூத்துக்குடி 5வது இடத்திலும் உள்ளன.

News May 6, 2024

கடைசி இடத்தில் உள்ள 5 மாவட்டங்கள்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சமாக 90.47% தேர்ச்சியுடன் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 91.19% தேர்ச்சியுடன் நாகப்பட்டினம் 2வது இடத்திலும், 91.32% தேர்ச்சியுடன் திருவள்ளூர் 3வது இடத்திலும், 91.87% தேர்ச்சியுடன் கிருஷ்ணகிரி 4வது இடத்திலும், 92.28% தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் 5வது இடத்திலும் உள்ளது.

News May 6, 2024

12th Exam: அதிக 100/100 பெற்ற பாடங்கள்

image

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழகம் முதல் 94.56% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், கணினி அறிவியல்-6996, கணிதம்-2587, வணிகம்-3299, வணிகவியல்-6142, கணக்குப்பதிவியல்-1647, கணினி பயன்பாடுகள்-2251 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், இம்முறை, 26,352 பேர் எதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

News May 6, 2024

படிப்பில் முன்னேறிய வட மாவட்டங்கள்

image

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2022-2023ஆம் கல்வியாண்டில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் 90 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்கின்றன.

News May 6, 2024

முதலிடம் பிடித்த திருப்பூர்

image

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.42% தேர்ச்சி பெற்று சிவகங்கை, ஈரோடு மாவட்டங்கள் 2ஆவது இடமும், 97.25% பெற்று அரியலூர் 3வது இடமும், 96.97% பெற்று கோவை 4வது இடமும், 96.44% தேர்ச்சி பெற்று நெல்லை, பெரம்பலூர் மாவட்டங்கள் 5வது இடமும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, விருதுநகர் 97.85% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது.

News May 6, 2024

அனைத்து மாவட்டங்களுமே 90% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு பல மாவட்டங்களில் மாணவர்கள் 90%-க்கும் கீழ் தேர்ச்சியான நிலையில், இம்முறை அனைத்து மாவட்டங்களுமே 90% மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர். 90.47% பெற்று திருவண்ணாமலை மாவட்டம் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. கடந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டம் 87.30% பெற்றதே குறைந்த தேர்ச்சி விகிதமாகும்.

News May 6, 2024

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

image

* அறிவியல் பாடப்பிரிவுகள் 96.35%
* வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.46%
*கலைப் பிரிவுகள் 85.67%
* தொழிற்பாடப் பிரிவுகள் 85.85%

News May 6, 2024

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

image

இயற்பியல் பாடத்தில் 98.48% பேர்
வேதியியல் பாடத்தில் 99.14% பேர்
உயிரியல் பாடத்தில் 99.35% பேர்
கணிதம் பாடத்தில் 98.57% பேர்
தாவரவியல் பாடத்தில் 98.86% பேர்
விலங்கியல் பாடத்தில் 99.04% பேர்
கணினி அறிவியல் பாடத்தில் 99.80% பேர்
வணிகவியல் பாடத்தில் 97.77% பேர்
கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

image

கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 8,03,385 பேர் தேர்வெழுதிய நிலையில், இந்தாண்டு 7,60,606 பேர் தேர்வெழுதினர். கடந்த ஆண்டு 7,55,451 (94.03%) தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 7,19,196 (94.56%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவியர் 4,05,753 (96.38%), மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு மாணவியர் 3,93,790 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:
▶அரசுப் பள்ளிகள் – 91.02%
▶அரசு உதவிப் பெறும் பள்ளிகள் – 95.49%
▶தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.70%
▶இருபாலர் பள்ளிகள் – 94.78%
▶பெண்கள் பள்ளிகள் – 96.39%
▶ஆண்கள் பள்ளிகள் – 88.98%

error: Content is protected !!