news

News May 6, 2024

மூன்றாம் பாலினத்தவர் 100% தேர்ச்சி

image

+2 தேர்வில் கடந்த ஆண்டை போலவே, மூன்றாம் பாலினத்தவர் தேர்ச்சி 100%ஆக உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். அதேபோல், இந்தாண்டும் ஒரேயொரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதிய நிலையில், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று கவனம் ஈர்த்துள்ளார். 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர் யாரும் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

அதிக தேர்ச்சி பெற்ற பாடம்

image

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், முக்கிய பாடங்கள் வரிசையில் ‘கணினி அறிவியல் பாடத்தில் 99.80% தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. ▶உயிரியல் 99.35%, ▶வேதியியல் 99.14%, ▶விலங்கியல்-99.04%, ▶தாவரவியல்-98.86%, ▶கணிதம்-98.57%, ▶இயற்பியல்-98.48%, வணிகவியல்-97.77%, கணக்குப்பதிவியல்-96.61% பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

News May 6, 2024

சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை சரிவு

image

+2 தேர்வில் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 32,501 மாணவர்கள் சென்டம் எடுத்திருந்த நிலையில், இந்தாண்டு 26,352 பேர் சென்டம் எடுத்துள்ளனர். அதன்படி, தாவரவியல் – 90, விலங்கியல் – 382, கணினி அறிவியல் – 6,996, வணிகவியல் – 6,142, கணக்குப்பதிவியல் – 1,647, பொருளியல் – 3,299, கணினிப் பயன்பாடுகள் – 2,251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 210 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.

News May 6, 2024

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த 5 மாவட்டங்கள்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்சமாக 84.70% தேர்ச்சியுடன் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 85.42% தேர்ச்சியுடன் மயிலாடுதுறை 2வது இடத்திலும், 87.81% தேர்ச்சியுடன் திருவண்ணாமலை 3வது இடத்திலும், 88.30% தேர்ச்சியுடன் கிருஷ்ணகிரி 4வது இடத்திலும், 88.78% தேர்ச்சியுடன் காஞ்சிபுரம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

News May 6, 2024

கடைசி இடங்களை பிடித்த மாவட்டங்கள்

image

மயிலாடுதுறை 92.38%
திருப்பத்தூர் 92.34%
ராணிப்பேட்டை 92.28%
காஞ்சி -92.28%
கள்ளக்குறிச்சி 92.19%
கிருஷ்ணகிரி 91.87%
திருவள்ளூர் 91.32%
நாகை 91.19%
தி.மலை 90.47%

News May 6, 2024

20 to 30 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

image

சேலம் 94.60%
சென்னை 94.48%
கடலூர் 94.36%
நீலகிரி 94.27%
புதுக்கோட்டை 93.79%
தருமபுரி 93.55%
தஞ்சை 93.46%
விழுப்புரம் 93.17%
திருவாரூர் 93.08%
வேலூர் 92.53%

News May 6, 2024

10-20 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

image

தென்காசி 96.07%
கரூர் 95.90%
திருச்சி 95.74%
குமரி 95.72%
மதுரை 95.65%
திண்டுக்கல் 95.40%
மதுரை 95.19%
ராமநாதபுரம் 94.89%
செங்கல்பட்டு 94.71%
நாமக்கல் 96.10%

News May 6, 2024

முதல் 10 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

image

திருப்பூர் 97.45%,
ஈரோடு 97.42%,
சிவகங்கை 97.42%,
அரியலூர் 97.25%,
கோவை 96.97%,
விருதுநகர் 96.64%,
நெல்லை 96.44%,
பெரம்பலூர் 96.44%,
தூத்துக்குடி 96.39%,
நாமக்கல் 96.10%.

News May 6, 2024

115 சிறைவாசிகள் +2 தேர்ச்சி

image

+2 தேர்வு எழுதிய சிறைவாசிகளின் தேர்ச்சி விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 79 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு மொத்தம் 125 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில், 115 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். அதன்படி, தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளின் விகிதம் 87.78%இல் இருந்து 92%ஆக அதிகரித்துள்ளது.

News May 6, 2024

5,161 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்ச்சி

image

+2 தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 4,398 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,923 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு மொத்தம் 5,603 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 5,161 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாற்றுத் திறனாளிகளின் தேர்ச்சி விகிதம், 89.20% இருந்து 92.11%ஆக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!