India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிரஞ்சீவியான ஹனுமான், நாராயணரின் ராமர் அவதாரம் முடிந்த பிறகும் பூமியில் வாழ்வதாகவும், திரேதா யுகத்தில் நாராயணர், கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனனின் ரதத்தில் கொடியாக எழுந்தருளியதாகவும் பூராணம் கூறுகிறது. இதையடுத்து இமயமலை சென்று மறைவிடத்தில் தவமிருப்பதாகவும், கலியுகத்தில் நாராயணர் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தில் அவரை காண காத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தாா். இவரின் பேச்சை சிலர் விமர்சித்து வருகிறார்கள். பாஜக சார்பாக மண்டி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.
Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த தலைவர்கள் பேசுவது போல் வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்துக்கும் பயன்படுத்துகின்றன. அதற்குத் தடை விதித்த EC, ஏற்கெனவே வெளியிட்ட Deepfake வீடியோக்களை 3 மணி நேரத்தில் நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3ஆவது முறையாக நாளை செல்லவுள்ளார். இது அவரின் 3ஆவது விண்வெளி பயணமாகும். இதுகுறித்து பேட்டியளித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி செல்கையில் தன்னுடன் பகவத் கீதை புத்தகம், விநாயகர் சிலையை கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தான் தீவிர மதவாதி கிடையாது, ஆன்மிகவாதி என்றார் அவர்.
காசோலைகளில் Bearer Cheque, Order Cheque என 2 வகைகள் உள்ளன. Bearer Cheque காசோலையை கொடுத்து வங்கியில் யார் வேண்டுமானாலும் பணம் பெறலாம். அதை யாரேனும் திருடி வங்கியில் கொடுத்தாலும் பணம் தர வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கவே பின்புறத்தில் கையொப்பமிட வைத்து பணம் தரப்படுகிறது. ஆனால், Order Cheque-ல் பெயர் உள்ள நபருக்கே பணம் தரப்படுகிறது. எனவே, அதன் பின்புறம் கையெழுத்திட அவசியமில்லை.
நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயிலில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி, கயா, அயோத்திக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ₹18,550 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு மருத்துவ காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி கொடுத்த ₹538.62 கோடியில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடத்திருப்பதாகக் கூறி ED அவரை கைது செய்திருந்தது. 75 வயதான அவர் புற்றுநோய் பாதிப்புடன் இருந்த நிலையில், தற்போது அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தயிரானது பால் வகையைச் சேர்ந்த உணவுப் பொருளாகும். இதை இரவு நேரத்தில் சாப்பிடலாமா, கூடாதா என்பதில் பலருக்கு குழப்பம் உண்டு. வயிற்று பிரச்னை இருப்பவர்கள் இரவு உணவில் தயிரை சேர்த்தால் செரிமான கோளாறு உண்டாகும். இரவில் நம் உடலுக்கு பெரிதாக உழைப்பு இல்லாததால் உணவு ஜீரணம் ஆவதற்கு சிரமம் ஏற்படும். இதனாலேயே, இரவில் உணவுடன் தயிர் கலப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமான தோழி’ தொடர் முடிவுக்கு வந்தது. பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பிரியமான தோழி’ தொடரில், பவித்ரா, சங்கவி, ஆதி கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் அதே நேரத்தில் (பகல் 1 மணி), ‘புன்னகைப் பூவே’ என்ற புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் வீரர்களுக்கான பரிசுத்தொகையை பாக்., கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கோப்பையை வென்றால் இந்திய மதிப்பில் தலா ரூ.83 லட்சத்தை ஒவ்வொரு வீரரும் பெறுவார்கள். பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில், வரும் ஜூன் 6-ஆம் தேதி அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த டி20 உலகக் கோப்பையில் அசத்திய பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.
Sorry, no posts matched your criteria.