news

News May 7, 2024

ரோஹித் ஷர்மா தகுதியானவர்

image

டி20 உலகக் கோப்பையுடன் ரோஹித் ஷர்மாவை பார்க்க வேண்டுமென முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஐசிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில், டி20 உலகக் கோப்பையில் அவரது கேப்டன்சி, இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும், இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை வழிநடத்த அவர் சரியாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், உலகக் கோப்பையை வெல்ல ரோஹித் மிகவும் தகுதியானவர் என பாராட்டியுள்ளார்.

News May 7, 2024

பாலிடெக்னிக் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடக்கம்

image

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024 – 25ம் கல்வியாண்டுக்கான நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளத்தில் மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு கட்டணம் ₹150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

News May 7, 2024

தோனி ஏன் தாமதமாக களமிறங்குகிறார்?

image

PBKS-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தோனி தாமதமாக களமிறங்கியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம், அவரது காலில் காயம் ஏற்பட்டிருப்பதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் சென்னை போட்டியின் கடைசி ஓவரில் தோனி ரன் எடுக்க ஓடவில்லை என ரசிகர்கள் கூறுகின்றனர். மற்றொரு விக்கெட் கீப்பரான கான்வேயும் காயம் காரணமாக விளையாடாததால் தோனி விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

News May 7, 2024

NRI வாடிக்கையாளர்களும் இனி UPI பரிவர்த்தனை செய்யலாம்

image

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, இந்தியாவில் UPI பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய அம்சத்தை, அந்த வங்கியின் iMobile Pay செயலி மூலம் NRI வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.

News May 7, 2024

11 மணி நிலவரப்படி 25.41% வாக்குகள் பதிவு

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வெயில், மழையை பொருட்படுத்தாது மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 27.34%, சத்தீஸ்கர் 29.90%, கோவா 30.94%, குஜராத் 24.35%, கர்நாடகா 24.48%, வாக்குகள் பதிவாகியுள்ளன.

News May 7, 2024

மெட் காலாவில் ஜொலித்த ஆலியா பட்

image

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரும் பேஷன் ஷோ மெட் காலா. இந்நிகழ்வினை பிரபல ஃபேஷன் இதழான Vogue நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள, உலகம் முழுவதிலும் இருந்து பிரபலமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நேற்று நடந்த இந்நிகழ்வில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொண்டார். அவர் சாப்யாஷாச்சியின் சேலையில் ஜொலித்தார்.

News May 7, 2024

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

image

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி, கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை கஞ்சா வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், முன் ஜாமின் வழங்கக் கோரி, விரைவில் நீதிமன்றத்தை நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 7, 2024

உயர்கல்வி மிக முக்கியம் மாணவர்களே

image

மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே கார்பரேட் நிறுவனங்கள் பல அவர்களுக்கு வேலைவாய்ப்பு மோகம் காட்டி உள்ளிழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாணவர்கள் உயர் கல்வியை தவற விடுகின்றனர். 17 வயதிலேயே பணி கிடைத்துவிடுவதால் ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள், 25 வயதுக்கு பின்னரே உயர்கல்வியின் அவசியத்தை உணர்கின்றனர். கல்லூரி படிப்புதான் உங்களை உயர்த்தும் மாணவர்களே. சிந்திப்பீர்.

News May 7, 2024

‘பி.டி.சார்’ திரைப்படம் எப்போது வெளியீடு?

image

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘பி.டி.சார்’ திரைப்படம், வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தை, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

CSK வரவேற்பறையில் IPL 2024 கோப்பை

image

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 2024 IPL கோப்பையை விரைவில் CSKவின் வரவேற்பறையில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் அணியில் இருந்து விடைபெறுவதாகவும், சென்னையிடமிருந்து தனக்குக் கிடைத்த அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்காக நன்றி என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!